MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Ilayaraja: இசைஞானியின் நேர்மை.! மெகா ஹிட் படத்திற்கு சம்பளம் வாங்க மறுத்தது ஏன்?!

Ilayaraja: இசைஞானியின் நேர்மை.! மெகா ஹிட் படத்திற்கு சம்பளம் வாங்க மறுத்தது ஏன்?!

இசைஞானி இளையராஜா, ஒரே மெஹாஹிட் படத்திற்கு 16 மணி நேரம் உழைத்து இசையமைத்தார். அந்த படத்தில் சில காட்சிகள் பிடிக்காததால், பிடிக்காமல் செய்த வேலைக்கு சம்பளம் வாங்குவது மனசாட்சிக்கு விரோதமானது என்று கூறி தனது சம்பளத்தை வாங்க மறுத்துவிட்டார். 

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Feb 04 2026, 09:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
நட்பை கூட கற்பை போல!
Image Credit : Facebook

நட்பை கூட கற்பை போல!

திரையுலகில் வெற்றி என்பது பணத்தாலும் புகழாலும் அளவிடப்படும் ஒன்று. ஆனால், ஒரு மெகா ஹிட் படத்திற்குத் தான் செய்த வேலைக்காகச் சம்பளம் வாங்க மறுப்பது என்பது ஒரு மிகச்சிறந்த கலைஞனால் மட்டுமே சாத்தியம். அந்த ஆச்சரியமானச் சம்பவத்தை 'முதல் மரியாதை' திரைப்படத்தின் மூலம் நிகழ்த்திக் காட்டியவர் இசைஞானி இளையராஜா.

25
நண்பனின் படைப்பும்... கலைஞனின் கேள்வியும்...
Image Credit : Facebook

நண்பனின் படைப்பும்... கலைஞனின் கேள்வியும்...

இயக்குநர் பாரதிராஜா தனது ஆருயிர் நண்பரான இளையராஜாவிடம் 'முதல் மரியாதை' படத்தின் இறுதிப் பிரதியைக் காட்டியபோது, இசைஞானிக்கு ஒரு கலைஞனாகத் திருப்தி ஏற்படவில்லை. "என்ன இப்படி எடுத்திருக்கிறாய்?" என்று வெளிப்படையாகவே கேட்டவர், சில மாற்றங்களைச் செய்து மீண்டும் படம்பிடித்து வரச் சொன்னார். பாரதிராஜாவின் மீதான அன்பால் அவர் சொன்ன அந்த விமர்சனம், ஒரு தரமான படைப்பு வர வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே இருந்தது.

Related Articles

Related image1
Music: உள்ளத்தை அள்ளிச் சென்ற சிற்பி.! தமிழ் திரையிசையை மாற்றியமைத்த 10 பாடல்கள்!
Related image2
Music: வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட கமல்ஹாசன்.! அஜித் குமாருக்காக அவர் பாடிய பாடல் எது தெரியுமா?
35
தொழில் நேர்மைக்குக் கிடைத்த 16 மணி நேர உழைப்பு
Image Credit : Facebook

தொழில் நேர்மைக்குக் கிடைத்த 16 மணி நேர உழைப்பு

பாரதிராஜா மாற்றங்கள் செய்யாமல் பின்னணி இசைக்கு அனுப்பிய போதும், இளையராஜா கோபப்படவில்லை. மாறாக, "தனக்கு இந்தப் படம் பிடிக்கவில்லை என்றாலும், கமிட் செய்த வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும்" என்ற நேர்மையில் உறுதியாக இருந்தார். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக அவர் இடைவிடாது 16 மணி நேரம் உழைத்தார். தான் ரசிக்காத ஒரு காட்சியாக இருந்தாலும், திரையில் பார்ப்பவர்களைக் கலங்க வைக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர் போட்ட இசை, இன்றுவரை தமிழர்களின் ஆன்மாவோடு கலந்திருக்கிறது.

45
சம்பளத்தைத் துறந்த 'ஞானி'
Image Credit : Google

சம்பளத்தைத் துறந்த 'ஞானி'

படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் ஹிட் அடித்தது. வசூலில் சாதனை படைத்தது. ஆனால், இளையராஜா தனது சம்பளத்தைப் பெற மறுத்துவிட்டார். அதற்குக் காரணமாக அவர் சொன்னதுதான் அவரது நேர்மைக்குச் சான்று."இந்தப் படம் எனக்குப் பிடிக்கவில்லை என்ற உணர்வோடுதான் இதற்கு இசை அமைத்தேன். பிடிக்காமல் செய்த ஒரு வேலைக்குச் சம்பளம் வாங்குவது எனது கலைக்கும், மனசாட்சிக்கும் விரோதமானது" என கூறிவிட்டாராம் இசைஞானி.

இந்த நெகிழ்ச்சியான தகவலை அப்படத்தில் பணியாற்றிய சித்ரா லட்சுமணன் பலமுறை பதிவு செய்துள்ளார். பணம் இரண்டாம் பட்சம், தான் செய்யும் தொழிலுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற அந்தப் பண்பே இளையராஜாவை மற்றவர்களிடம் இருந்து தனித்துக் காட்டுகிறது.

55
தாகம் குறையாத இசைப் பயணம்
Image Credit : Google

தாகம் குறையாத இசைப் பயணம்

பின்னணி இசை மற்றும் ஒலியின் நுணுக்கங்களைத் தெரிந்தவர் என்று டி.வி. கோபாலகிருஷ்ணன் போன்ற ஜாம்பவான்களால் பாராட்டப்பட்டவர் இளையராஜா. கண்களால் ஒரு காட்சியைப் பார்த்தால், கை தானாக இசையை எழுதும் வேகமும் திறமையும் அவருக்கு உண்டு. எத்தனை உயரங்கள் தொட்டாலும், இன்றும் அதிகாலையிலேயே ஸ்டுடியோவுக்குச் செல்லும் அவரது பழக்கம், இசையின் மீதான அவரது தீராத தாகத்தையே காட்டுகிறது. 'முதல் மரியாதை' படத்தில் அவர் காட்டிய அந்த நேர்மையும், பணத்தைப் பொருட்படுத்தாத குணமும் தான், அவரை இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் 'இசைஞானி'யாக சிம்மாசனம் போட்டு அமர வைத்துள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
சினிமா
சினிமா காட்சியகம்
இசை

Latest Videos
Recommended Stories
Recommended image1
கோமதிக்கு ஒரு நியாயம், மயிலுக்கு ஒரு நியாயமா? முடிவுக்கு வருகிறதா பாண்டியன் – கோமதி பஞ்சாயத்து?
Recommended image2
Michael Jackson: மூன்வாக் போட ரெடியா? திரையரங்குகளை அதிரவைக்க வருகிறார் மைக்கேல் ஜாக்சன் - கொண்டாட்டத்திற்குத் தயாராகுங்கள்!
Recommended image3
Pandian Stores 2: யாருமே செய்யாத மேஜிக்! விஜய் டிவியின் ஒட்டுமொத்த ஸ்லாட்டையும் தட்டித்தூக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜோடி!
Related Stories
Recommended image1
Music: உள்ளத்தை அள்ளிச் சென்ற சிற்பி.! தமிழ் திரையிசையை மாற்றியமைத்த 10 பாடல்கள்!
Recommended image2
Music: வசீகர குரலால் ரசிகர்களை கட்டிப்போட்ட கமல்ஹாசன்.! அஜித் குமாருக்காக அவர் பாடிய பாடல் எது தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved