- Home
- Cinema
- ' என்றென்றும் ரஜினிகாந்த்'.. மீண்டும் இணைவதை உறுதி செய்த இளையராஜா.. திடீர் பகிர்வுக்கு என்ன காரணம் தெரியுமா?
' என்றென்றும் ரஜினிகாந்த்'.. மீண்டும் இணைவதை உறுதி செய்த இளையராஜா.. திடீர் பகிர்வுக்கு என்ன காரணம் தெரியுமா?
30 வருடங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இளைய ராஜா பகிர்ந்து என்றென்றும் ரஜினிகாந்த் என குறிப்பிட்டுள்ளார்..

ilayaraaja
இளையராஜாவின் பாடல்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். காதல், சோகம், வேதனை, துக்கம் போன்ற பலரது கவலைகளை மறக்க வைப்பது ராஜாவின் இசை தான். அதே போல், பலரது இரவு நேர தாலாட்டும் ராஜாவின் இசை என்றே கூறலாம்.
ilayaraaja
இவரது இசைக்கு உலகெங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக இசை உலகில் ராஜ்ஜியம் நடத்தி வரும் இளையராஜா, தமிழில், கீதாஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, அலைகள் ஓய்வதில்லை, கோழி கூவுது, கொக்கரக்கோ, ராஜாதி ராஜா, சிங்காரவேலன் உள்ளிட்ட சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
ilayaraaja
பாவலர் கிரியேஷன்ஸ் என்கிற நிறுவனம் சார்பில் திரைப்படங்களைத் தயாரித்து வந்த இளையராஜா (Ilaiyaraaja), இசைப்பணிகளில் கவனம் செலுத்தி வந்ததால், கடந்த 30 ஆண்டுகளாக படம் தயாரிக்காமல் இருந்து வந்தார்.
ilayaraaja
இந்நிலையில், தற்போது மீண்டும் பட தயாரிப்பில் களமிறங்க முடிவு செய்துள்ளாராம் இளையராஜா. இதற்காக அவர் ரஜினியுடன் (Rajini) பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.
ilayaraaja
மேலும் இப்படத்தை தனது அபிமான இயக்குனரான பால்கியை (Balki) இயக்க வைக்கவும் இளையராஜா திட்டமிட்டுள்ளாராம். அதேவேளையில் பால்கி சொன்ன கதையும் ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனதாம்.
ilayaraaja
ஆதலால் விரைவில் இளையராஜா (Ilaiyaraaja) தயாரிப்பில் பால்கி இயக்கத்தில் ரஜினி நடிப்பில் ஒரு திரைப்படம் தயாராக உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
ilaiyaraja
ரஜினி - இளையராஜா 2.0 வை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது அப்டேட்ஸ் வந்த வண்ணம் உள்ளது..அதன் படி தற்போது இளையராஜாவின் ட்விட் அமைத்துள்ளது..
ilaiyaraja
அதாவது 30 வருடங்களுக்கு முன்னர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இளைய ராஜா பகிர்ந்து என்றென்றும் ரஜினிகாந்த் என குறிப்பிட்டுள்ளார்..
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.