பாஜகவில் இணைகிறாரா விஜய் அப்பா?... எஸ்.ஏ.சி. கொடுத்த அதிரடி விளக்கம்...!
தற்போது இந்த பட்டியலில் பிரபல இயக்குநரும், தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பெயர் அடிபடுகிறது.

சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு திரைப்பிரபலங்கள் பலரையும் பாஜக தன்வசம் இழுத்து வருகிறது. சமீபத்தில் நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து உடனடி விளக்கம் கொடுத்த அவர், தான் பாஜகவில் இணையவில்லை என்பதை உறுதிப்பட தெரிவித்தார்.

அதேபோல் நடிகை சுகன்யா பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், தனக்கு அரசியல் மீது துளிகூட ஆர்வம் கிடையாது என மறுத்தார்.

கடந்த ஜூலை மாதம் முதலே நடிகை குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால் அதை தொடர்ந்து மறுத்து வந்த குஷ்பு நேற்று டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் இணைந்தார்.

அதுமட்டுமின்றி பிப்ரவரி மாதமே தான் காங்கிரஸை விட்டு விலக முடிவு செய்ததாகவும் கூறினார். தற்போது இந்த பட்டியலில் பிரபல இயக்குநரும், தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பெயர் அடிபடுகிறது.

இதுகுறித்து இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் பிரபல தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில், இது முற்றிலும் தவறான தகவல். இதுமாதிரியான தகவல்களை யார் பரப்புகிறார்கள் என தெரியவில்லை எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு தளபதி விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க பாஜக முயன்று வருவதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவருடைய அப்பாவிற்கு வலை விரித்திருப்பதாக வதந்தி பரவியது. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த குழப்பம் அடைந்த நிலையில், எஸ்.ஏ.சி. காலதாமதம் செய்யாமல் விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.