- Home
- Cinema
- Arabic Kuthu Song : ‘அரபிக் குத்து’ லிரிக்ஸுக்கு விஜய்யின் ரெஸ்பான்ஸ் என்ன? - ஓப்பனாக சொல்லிய சிவகார்த்திகேயன்
Arabic Kuthu Song : ‘அரபிக் குத்து’ லிரிக்ஸுக்கு விஜய்யின் ரெஸ்பான்ஸ் என்ன? - ஓப்பனாக சொல்லிய சிவகார்த்திகேயன்
Arabic Kuthu Song : சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் அரபிக் குத்து பாடலின் லிரிக்ஸை கேட்டு விஜய் என்ன சொன்னார் என்பது குறித்து பேசியுள்ளார்.

ரிலீசுக்கு ரெடியான பீஸ்ட்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படம் பீஸ்ட். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ஷான் டாம் சாக்கோ என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. வருகிற ஏப்ரல் மாதம் இப்படம் திரை காண உள்ளது.
லவ்வர்ஸ் டே ஸ்பெஷல் அரபிக் குத்து
கடந்த மாதம் காதலர் தினத்தன்று பீஸ்ட் படத்தின் முதல் பாடலான அரபிக் குத்து வெளியானது. அனிருத்தும் ஜோனிடா காந்தியும் இணைந்து பாடியிருந்த இப்பாடலுக்கு பாடல் வரிகளை சிவகார்த்திகேயன் எழுதி இருந்தார். வெளியானது முதலே வைரல் ஹிட்டான இப்பாடல் இன்றளவும் மவுசு குறையாமல் பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.
சிவகார்த்திகேயன் லிரிக்ஸ்...
இப்பாடல் மக்களிடையே மிகவும் பிரபலமடைய முக்கிய காரணம் இப்பாடலின் வரிகள் தான். அரபு மொழியில் இதன் லிரிக்ஸை எழுதி இருந்தார் சிவகார்த்திகேயன். அந்த லிரிக்ஸ் புதுவிதமாக இருந்ததால் மக்களிடையே மிகவும் பாப்புலர் ஆனது அரபிக் குத்து. இப்பாடல் யூடியூப்பில் 130 மில்லியனுக்கு மேல் பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.
விஜய் ரெஸ்பான்ஸ்
இந்நிலையில், சமீபத்தில் விருது விழா ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் அரபிக் குத்து பாடலின் லிரிக்ஸை கேட்டு விஜய் என்ன சொன்னார் என்பது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “அரபிக்குத்து’ பாடல் ரொம்ப நாள் முன்னாடியே ஷூட் பண்ணி முடித்துவிட்டார்கள். அப்போ எனக்கு விஜய் சார் கிட்ட இருந்து போன் எதுவும் வரல. சரி விஜய் சாருக்கு பாட்டு பிடிக்கல போலனு நினைச்சேன். சமீபத்தில் தான் புரோமோ வீடியோ ஷுட் பண்ணோம்.
பெரிய ஹிட்டாகும்னு சொன்ன விஜய்
அப்போது தான் விஜய் சார் கால் பண்ணி ‘பாட்டு சூப்பர் பா.... லிரிக்ஸ் எழுதி கொடுத்ததற்கு ரொம்ப தேங்க்ஸ். அரபிக்லலாம் பயங்கரமா எழுதுறியே’ என்றார். உங்களுக்கு தெரியாதது ஒன்னுல்லையே சார். அனிருத் சூப்பாரா பாடிவிடுவார்னு தெரியும், நாம சும்மா லிரிக்ஸ் மூலம் இடத்தை மட்டும் நிரப்ப வேண்டியது தான் என்று அவரிடம் கூறினேன். அவருக்கு ‘அரபிக்குத்து’ பாட்டு ரொம்பவே பிடிச்சிருந்தது. முதல்முறை கேட்ட உடனேயே அனிருத்திடம் இது பெரிய ஹிட்டாகும் என விஜய் தெரிவித்ததாக சிவகார்த்திகேயன் கூறினார்.
இதையும் படியுங்கள்... Director Bala Divorce : 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது! மனைவியை விவாகரத்து செய்தார் இயக்குனர் பாலா