டே நீ பொண்ணுங்களோட ரொம்ப விளையாடுற, உனக்கு கல்யாணம் ஆயிருச்சுல: புகழை மிரட்டிய ஹன்சிகா!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஹன்சிகா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
விஜய் தொலைக்காட்சி என்றாலே பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது. பிக்பாஸ், சீரியல், குக் வித் கோமாளி, ஊ சொல்றியா ஊஊ சொல்றியா, அண்டாகாகசம், சூப்பர் சிங்கர் என்று ஏராளமான ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்பு செய்து வருகிறது.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
அதில் சமையல் நிகழ்ச்சியை மையப்படுத்தி ஒளிபரப்பாகி வருவது என்னவோ குக் வித் கோமாளி தான். இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த ஏகபோக வரவேற்பைத் தொடர்ந்து தற்போது இந்நிகழ்ச்சி 4ஆவது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
இந்த சீசனில் முக்கிய அங்கமாக கடந்த சீசன்களில் எல்லாம் கோமாளியாக வலம் வந்த ஷிவாங்கி இந்த 4ஆவது சீசனில் குக்காக வலம் வந்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்துள்ளார். குறிப்பாக இதுவரையில் சமையலே தெரியாத மணிமேகலைக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
இந்த சீசனில் ஷிவாங்கி, மைம் கோபி, விசித்ரா, ஷெரின், ராஜ் ஐயப்பா, காளையன், கிஷோர் ராஜ்குமார், ஸ்ருஷ்டி டாங்கே, விஜே விஷால், ஆண்ட்ரியா நவுரிகட் ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டுள்ளனர்.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
இவர்களுக்கு கோமாளியாக சில்மிஷம் சிவா, தங்கதுரை, குரேஷி, சிங்கப்பூர் தீபன், புகழ், மோனிஷா, ரவீனா, மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்நிகழ்ச்சியில் ஷிவாங்கி குக் ஆஃப் தி வீக் பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த நிகழ்ச்சியின் 2ஆவது வாரத்தில் கிஷோர் ராஜ்குமார் வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என்பதால், போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக சமையலில் இறங்கவுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
இந்த நிலையில், இந்த வாரம் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு ஹன்சிகா மோத்வானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். ஆம், இது தொடர்பான வீடியோவை டிஸ்னி+ஹாட்ஸ்டார் தங்களது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
அந்த வீடியோவில் இந்த நிகழ்ச்சியை நான் ரீல்ஸாக பார்க்கிறேன். புகழைப் பார்த்து டே நீ பொண்ணுங்களோட ரொம்ப விளையாடுற, உனக்கு கல்யாணம் ஆயிருச்சுல என்று மிரட்டும் தோணியில் பேசியுள்ளார்.
குக் வித் கோமாளி சீசன் 4ல் ஹன்சிகா மோத்வானி
இதற்கு முன்னதாக சந்தோஷ் நாராயணன், சிவகார்த்திகேயன், ஆர்ஜேபாலாஜி, சிம்பு, அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குக் வித் கோமாளி 4ல் ஹன்சிகா மோத்வானி
கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி ஹன்சிகா மோத்வானிக்கும், அவரது குடும்ப நண்பரான மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் சோஹேல் கதூரியாவுக்கும் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஹன்சிகா, பார்ட்னர், ரௌடி பேபி, கார்டியன், காந்தாரி ஆகிய தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இது தவிர 105 நிமிடம், மை நேம் இஸ் ஸ்ருதி ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார்.
ஹன்சிகா மோத்வானி
அதுமட்டுமின்றி இவரது நடிப்பில் உருவாகியுள்ள லவ் ஷாதி டிராமா (Love Shaadi Drama) என்ற வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமையில் மட்டும் ஒளிபரப்பு செய்யப்படும் இந்த வெப் தொடரின் 3ஆவது சீசன் நேற்று வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.