- Home
- Cinema
- AK 61 Update : பர்ஸ்ட் யுவன்... இப்போ இவரா? - வலிமை கூட்டணியை கழட்டிவிடும் எச்.வினோத்! AK 61-ல் அதிரடி மாற்றம்
AK 61 Update : பர்ஸ்ட் யுவன்... இப்போ இவரா? - வலிமை கூட்டணியை கழட்டிவிடும் எச்.வினோத்! AK 61-ல் அதிரடி மாற்றம்
AK 61 Update : வலிமை கூட்டணியில் இப்படம் தயாராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சில மாற்றங்களை படக்குழு செய்து வருகிறது.

அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வாகை சூடியது. இப்படம் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தியேட்டரில் வெளியாகி ஒரு மாதத்திற்கு பின் ஓடிடி-யில் ரிலீசான இப்படம் அதிலும் சாதனை படைத்து வருகிறது. அதன்படி இப்படம் ஓடிடி-யில் வெளியான ஒரே வாரத்தில் 500 மில்லியன் நிமிடங்களுக்கு மேல் ஸ்ட்ரீம் ஆகி சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து நடிகர் அஜித் தற்போது ஏ.கே.61 படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். வலிமை படத்தின் இயக்குனர் எச்.வினோத் தான் இப்படத்தையும் இயக்க உள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். இப்படம் வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க உள்ளதாகவும், மேலும் பிரபல மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வலிமை கூட்டணியில் இப்படம் தயாராகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அடுத்தடுத்து சில மாற்றங்களை படக்குழு செய்து வருகிறது. முதலில் இப்படத்தில் யுவன் சங்கர் ராஜாவுக்கு பதில் ஜிப்ரான் ஒப்பந்தமானார். தற்போது ஸ்டண்ட் மாஸ்டரும் மாற்றப்பட்டு உள்ளார். வலிமை படத்தில் மிரட்டலான ஸ்டண்ட் காட்சிகளை அமைத்து பாராட்டுக்களை பெற்ற திலீப் சுப்பராயண் ஏ.கே.61 படத்தில் இடம்பெறவில்லை.
அவருக்கு பதில் சுப்ரீம் சுந்தர் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் கோலிசோடா படத்துக்கு ஸ்டண்ட் காட்சிகள் அமைத்திருந்த இவர், மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, பீஷ்ம பருவம், அய்யப்பனும் கோஷியும் போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... Beast movie : விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தை ரிலீஸ் செய்ய தடை - அரசின் அதிரடி அறிவிப்பால் ஷாக் ஆன ரசிகர்கள்