'சூரரை போற்று' ரியல் பொம்மி நடத்தி வரும் பேக்கிரியின் பெயரை முதல் முறையாக வெளியிட்ட ஜி.ஆர்.கோபிநாத்..!
ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட சூரரை போற்று படத்தில், அவரது மனைவி பொம்மி கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். ஒரு பேக்கிரி துவங்க வேண்டும் என வைராக்கியமாக இருந்த தன்னுடைய ஆசையை நிறைவேற்றுவார்.
இந்நிலையில், தற்போது ஜி.ஆர்.கோபிநாத் முதல் முறையாக அவரது மனைவி, ரியல் பொம்மியின் பேக்கிரியின் பெயரை வெளியிட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் பல தரப்பினரிடம் இருந்து பாராட்டுக்களை குவித்து வருகிறது. தீபாவளி விருந்தாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.
ஏர் டெக்கான் நிறுவனர் நிறுவிய கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்று படமான இதில், சூர்யா நெடுமாறன் ராஜாங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவே இல்லை... வாழ்த்திருக்கிறார். கண்டிப்பாக சூர்யாவிற்கு தேசிய விருது கிடைக்கும் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் கருத்துக்கள் உலவி வருகிறது.
சூரரைப் போற்று படத்தில் ஒவ்வொரு காட்சிகளும் ரசிகர்களை கட்டிப்போடும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக சூர்யா அம்மா ஊர்வசியின் காலில் விழுந்து கண்ணீர் விட்டு கதறும் சீனும், பிளைட் டிக்கெட்டிற்கு பணமின்றி விமான நிலையில் பிச்சையெடுக்காத குறையாக பயணிகளிடம் பணம் கேட்கும் போதும் கண்கலங்க வைத்திருந்தார்.
சூர்யாவுக்கு நிராகராக, அவரது ஆசையை புரிந்து கொள்ளும் மனைவியாகவும், இது போல் ஒரு மனைவி கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம் என்று நினைக்க வைத்தது பொம்மி கதாபாத்திரம்.
கணவருக்கு உறுதுணையாக நின்று அவரையும் வாழ்க்கையில் ஜெயிக்க வைத்து, தன்னுடைய கனவையும் நினைவாகிய ரியல் பொம்மியின் பேக்கிரி பெயரை தற்போது ஜி.ஆர்.கோபிநாத் வெளியிட்டுள்ளார்.
காரணம் அந்த பேக்கரியை ஆரம்பித்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், இந்த பதிவை அவர் வெளியிட்டுள்ளார். 'பன் வேர்ல்ட் ஐயங்கார் பேக்கரி' என்ற பெயரில் தான் அவர் பேக்கரி நடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.