- Home
- Cinema
- எம்.பி யை தொடர்ந்து காவலர்களுக்கு லீவ் விட்ட மாநிலம்..“தி காஷ்மீர் பைல்ஸ்”க்கு அதிகரிக்கும் மவுசு
எம்.பி யை தொடர்ந்து காவலர்களுக்கு லீவ் விட்ட மாநிலம்..“தி காஷ்மீர் பைல்ஸ்”க்கு அதிகரிக்கும் மவுசு
அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் அனைவரும் “தி காஷ்மீர் பைல்ஸ்” என்ற படத்தை பார்த்து மகிழ நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

The Kashmir Files
விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள “தி காஷ்மீர் பைல்ஸ்” படத்தில் ரஞ்சன் அக்னிஹோத்ரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
The Kashmir Files
இரண்டு தினங்களுக்கு முன் திரைக்கு வந்த இப்படம் 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியை மையமாக கொண்டுள்ளது.
The Kashmir Files
காஷ்மீர் கிளர்ச்சியின் போது இந்து பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை தோலிருந்துள்ளதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்..சினிமா பார்க்க காவல்துறைக்கு லீவ் விட்ட மாநில அரசு... கேள்வி கணைகளால் பாலிவுட்டை அதிரவைத்த நடிகை
The Kashmir Files
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் குறித்து பாராட்டியுள்ள பிரதமர் மோடி.. துணிச்சலுடன் இந்த படத்தை உருவாக்கியதற்கு இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி உள்ளிட்ட படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
The Kashmir Files
பிரதமருடனான சந்தித்த மகிழ்ச்சியில் பேசிய இயக்குனர் "பிரதமரின் பாராட்டும், உன்னதமான வார்த்தைகளும் தான் படத்தை மேலும் சிறப்புறச் செய்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
The Kashmir Files
பிரதமர் மோடியின் நேரடி பாராட்டால் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” படத்தின் ரேட்டிங் எங்கையோ எகிறிடுச்சு. முன்னதாக மாநில கேளிக்கை வரியில் இருந்து இந்த படத்துக்கு விலக்கு அளிப்பதாக அம்மாநில முதல்வர் மத்திய பிரதேச முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்திருந்திருந்தார்.
The Kashmir Files
அதோடு மத்திய பிரதேச அரசு அதிரடி அறிவிப்பையும் கொடுத்தது. அதாவது “தி காஷ்மீர் ஃபைல்ஸ்” திரைப்படத்தைப் பார்ப்பதற்காக அம்மாநில போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
The Kashmir Files
மத்திய அரசை தொடர்ந்து தற்போது அசாம் அரசு அனைத்து ஊழியர்களுக்கு படம் பார்க்க அரை நாள் விடுமுறை அளித்துள்ளது.