MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 5வது நாளே 1000 கோடி போஸ்டர்; பான் இந்தியா படங்களால் ரசனை செத்து போச்சு - செல்வராகவன் ஆதங்கம்

5வது நாளே 1000 கோடி போஸ்டர்; பான் இந்தியா படங்களால் ரசனை செத்து போச்சு - செல்வராகவன் ஆதங்கம்

பான் இந்தியா படங்களால் மக்களின் ரசனை செத்துப் போய்விட்டதாக இயக்குனர் செல்வராகவன் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ஆதங்கத்துடன் பேசி உள்ளார்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Apr 06 2025, 08:53 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Selvaraghavan Says Bitter Truth About Pan India Films

Selvaraghavan Says Bitter Truth About Pan India Films

தமிழில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற மாஸ்டர் பீஸ் படங்களை இயக்கியவர் செல்வராகவன். இவர் தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இந்த நிலையில், நீயா நானா கோபிநாத் உடன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கலந்துகொண்ட செல்வராகவன், அதில் பான் இந்தியா படங்களின் வரவால் சினிமா எவ்வளவு பின்னடவை சந்தித்துள்ளது என்பதை ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார். அவரின் இந்த பேட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.

24
Selvaraghavan

Selvaraghavan

பான் இந்தியா ஒரு அசிங்கமான கல்சர்

அதில் அவர் பேசியதாவது : “பான் இந்தியா என்கிற அசிங்கமான கல்சர் இப்போ வந்திருக்கு. இதனால் இன்றைய சினிமாவில் எல்லாமே கமர்ஷியல் ஆகிடுச்சு. ஒரு குத்துப் பாட்டு இருக்கனும், பயங்கரமா டான்ஸ் ஆடனும், ஃபுல்லா சண்டை போடனும்னு இருந்தா, படத்தின் தரம் என்ன ஆகும். ஒரு நல்ல படம் எப்போ பார்த்தோம்னு யோசித்து பாருங்கள். எல்லாமே முடிஞ்சு போச்சு. எல்லாமே குத்தி குத்தி கிழிச்சிடுறாங்க. இன்றைய சூழலில் நல்ல படம் எடுப்பதற்கு இங்க ஆள் இல்லை.

கிழக்குச் சீமையிலே, மூன்றாம் பிறை மாதிரி படங்களெல்லாம் வந்து எவ்வளவு நாட்கள் ஆகிறது. இப்போதைக்கு படம் ஓடினால் போதும், காசு வந்தா போதும்னு தான் நினைக்கிறார்கள். அதுவும் தவறில்லை. எல்லாருமே காசுக்காக தான் படம் பண்ணுகிறோம். ஆனால் அதுமட்டும் தான் படம் என்கிற நிலைமை வந்துவிட்டது. ரியல் சினிமா வருவது கஷ்டமா இருக்கு. ஆயிரத்தில் ஒரு படம் தான் அப்படி வருது. அதையும் மக்கள் பார்த்து விடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் ஜீனியஸ்; தனுஷை செதுக்கிய சிற்பி! செல்வராகவன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

34
Director Selvaraghavan

Director Selvaraghavan

5வது நாளே 1000 கோடி போஸ்டர்

எனக்கென்னமோ... இது கொரோனாவுக்கு பின் வந்த மாற்றமாக தான் தெரிகிறது. இப்போ எல்லாரும் ஆயிரம் கோடி வேணும் என படம் எடுக்கிறார்கள். படம் ரிலீஸ் ஆன 5வது நாள் ஆயிரம் கோடினு போட்டுவிட வேண்டும் என நினைக்கிறார்கள். அது உண்மையிலேயே வசூலித்ததா என்பதெல்லாம் கிடையாது. பெரும்பாலானவர்கள் ஹீரோவை சந்தோஷப்படுத்தவே செய்யப்படுகிறது. அவர்களை சந்தோஷப்படுத்தினால் அடுத்த படம் கொடுப்பார்.

நல்ல சினிமா செத்து போச்சு. இனிமே ஒரு நல்ல சினிமாவோ அல்லது பாரதிராஜா போன்ற இயக்குனர்களோ வர முடியாது. ஏனெனில் இங்கு ஒரு படம் எடுத்தால் சர்வைவ் ஆக முடியாது. இப்போது 99 சதவீத படங்கள் அப்படி தான் எடுக்கிறார்கள். கொரோனா காலகட்டத்தில் மக்கள் 2 வருஷமா வீட்டுக்குள்ளேயே இருந்து அவர்களுக்கு மூளை என்னமோ ஆகிடுச்சு. இதை நான் கிண்டலுக்காக சொல்லவில்லை. என்னுடைய ஆயுள்காலம் முடியும் வரை நல்ல படங்கள் வராது.

44
Selvaraghavan About Pan India Films

Selvaraghavan About Pan India Films

ரசனை செத்து போச்சு

பான் இந்தியா படங்கள் மீது எனக்கு உடன்பாடு இல்லை. ஒரு படம் தமிழ்லையும் கிளிக் ஆகணும், தெலுங்குலையும் கிளிக் ஆகணும், மலையாளத்திலும் கிளிக் ஆகணும் என விரும்பினால் இந்த மாதிரி படங்கள் தான் வரும். கமர்ஷியலா எடுத்தா எல்லாரும் பார்த்துவிடுவார்கள் என நம்பி தான் பான் இந்தியா படங்களை எடுக்கிறார்கள். எல்லா பான் இந்தியா படங்களிலும் 4 பாடல்கள் இருக்கும். அதில் முக்கால்வாசி ஹீரோயினே ஆடிவிடுவார்கள்.

பான் இந்தியா படங்களில் கலை நயம் இருப்பதுபோல் தெரியவில்லை. இந்த பான் இந்தியா மோகத்தால் இந்தியில், பாலிவுட் படங்களையே மறந்துவிட்டார்கள். அங்கேயே நம் தென்னிந்திய படங்களை தான் பார்க்க விரும்புகிறார்கள். அங்கு இன்று டாப்பில் இருப்பவர்கள் எல்லாம் இங்கிருந்து சென்றவர்கள் தான். பான் இந்தியா படங்களால் ரசனை செத்துப் போச்சு” என ஆதங்கத்துடன் பேசி இருக்கிறார் செல்வராகவன்.

இதையும் படியுங்கள்... Selvaraghavan: விளங்கவே விளங்காது; யார் கிட்டையும் உதவி கேட்காதீங்க - தீர்க்க தரிசியாக மாறிய செல்வராகவன்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ் சினிமா
செல்வராகவன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved