அரசியல்வாதி தோற்றத்தில் கௌதம் மேனன்: பிறந்தநாளுக்கு டிரீட் கொடுத்த பத்து தல டீம்!
இயக்குனர் கௌதம் மேனன் பிறந்தநாளை முன்னிட்டு பத்து தல படத்தின் மிரட்டலான போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கௌதம் மேனன் பிறந்தநாள்
கடந்த 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த மின்னலே என்ற படத்தின் மூலமாக தன்னை ஒரு இயக்குநராக உலகிற்கு காட்டியவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். இந்தப் படத்தைத் தொடர்ந்து காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம், விண்ணைத்தாண்டி வருவாயா, நடுநிசி நாய்கள், நீதானே என் பொன் வசந்தம், என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா, வெந்து தணிந்தது காடு - பார்ட் 1 என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
கௌதம் மேனன் பிறந்தநாள்
இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், நடிகர் என்று பன்முக திறமை வாய்ந்தவராக திகழும் கௌதம் மேனன் ஆக்ஷன் மற்றும் ரொமாண்டிக் கதைக்கு பெயர் போனவராக திகழ்கிறார். தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களை இயக்கியுள்ளார்.
கௌதம் மேனன் பிறந்தநாள்
சினிமாவில் மட்டுமின்றி வெப் தொடரிலும் என்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். குயீன், பாவ கதைகள், நவரசா ஆகிய தொடர்களையும் இயக்கியிருக்கிறார். ஒரு இயக்குநராக மட்டுமின்றி தன்னை ஒரு நடிகராகவும் சினிமாவில் காட்டி வருகிறார்.
கௌதம் மேனன் பிறந்தநாள்
கடந்த 2020 ஆம் ஆண்டு திரைக்கு வந்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். இவ்வளவு ஏன், தற்போது தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் கூட கௌதம் மேனன் நடித்து வருகிறார்.
கௌதம் மேனன் பிறந்தநாள்
இந்த நிலையில், இன்று அவரது 50ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் கழுத்தில் ஜெயின் மற்றும் வெள்ளை நிற சட்டையில் அரசியல்வாதி போன்று கெத்தா போஸ் கொடுத்துள்ளார்.
கௌதம் மேனன் பிறந்தநாள்
ஒப்பிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் பத்து தல. முஃப்தி என்ற கன்னட படத்தின் தமிழ் ரீமேக்காக பத்து தல படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் சிம்பு ஏஜிஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், கௌதம் கார்த்திஹிக், பிரியா பவானி சங்கர், கலையரசன், ரெடின் கிங்ஸ்லி, டீஜே அருணாச்சலம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து கௌதம் மேனனும் நடித்துள்ளார். அவரது போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.