பாகுபலி முதல் லியோ வரை.. முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த தென்னிந்திய பிளாக்பஸ்டர் படங்கள்..!
வெளியான முதல் நாளிலேயே ரூ 100 கோடி கிளப்பில் நுழைந்த நான்கு தென்னிந்திய பிளாக்பஸ்டர் படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..
கடந்த சில ஆண்டுகளாக இந்திய பாக்ஸ் ஆபிஸில் தென்னிந்திய திரைப்படங்கள் பல வசூல் சாதனைகளை படைத்து வருகின்றனர். தென்னிந்திய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் சர்வதேச அளவிலான அங்கீகாரத்தையும் பெற்று வருகிறது. அந்த வகையில் வெளியான முதல் நாளிலேயே ரூ 100 கோடி கிளப்பில் நுழைந்த நான்கு தென்னிந்திய பிளாக்பஸ்டர் படங்களை இந்த பதிவில் பார்க்கலாம்..
Bahubali 2
பாகுபலி 2:
இது 2015 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகத்தின் திரைப்படத்தின் தொடர்ச்சியாகும். 2017 ஆம் ஆண்டு வெளியான பாகுபலி 2 முதல் நாளில் உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 201 கோடி வசூல் செய்தது. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கிய இந்தப் படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ.1,900 கோடியாக உள்ளது. இதன் மூலம் இந்தியாவின் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களில் 2-ம் இடத்தில் உள்ளது. இப்படத்தில் பிரபாஸ், ராணா டக்குபட்டி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ரம்யா கிருஷ்ணா மற்றும் நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
RRR
RRR உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களால் விரும்பப்பட்டது. உலக பாக்ஸ் ஆபிஸில் முதல் காட்சி நாளில் 240 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தின் மொத்த வசூல் ரூ.1,316 கோடி. எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், என்.டி.ராமராவ் ஜூனியர் மற்றும் ராம் சரண் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை எம்.எம்.கீரவாணி இசையமைத்திருந்தார்.
KGF 2 :
2022-ல் வெளியான இந்த படம் இந்திய அளவில் பல்வேறு பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை படைத்தது. மேலும் நடிகர் யாஷை உலகளாவிய புகழுக்கு உயர்த்தியது. இப்படம் வெளியான முதல் நாளில் உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.164 கோடி வசூல் செய்தது. படத்தின் மொத்த வசூல் ரூ.1,250 கோடி. இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய இப்படத்தில் நடிகர்கள் யாஷ், சஞ்சய் தத், ரவீனா டாண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்..
லியோ
தளபதி விஜய் நடித்த இந்தப் படம் அக்டோபரில் வெளியானது. லியோ படம் வெளியான முதல் நாளிலேயே உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ.140 கோடியை வசூலிக்க முடிந்தது. வெளியானதில் இருந்து இதுவரை 537 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் தளபதி விஜய், சஞ்சய் தத், அர்ஜுன் மற்றும் த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.