தமிழ் பேயாக மாறிய சன்னி லியோன்... விஜய் சேதுபதி வெளியிடும் பர்ஸ்ட் லுக்...
சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ள ஓ மை கடவுளே படத்தின் முதல் பார்வையை நாளை நடிகர் விஜய்சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Sunny Leone
ஆபாச குடோன் என பெயர் எடுத்தவர் நடிகையும் சூப்பர் மடலுமான சன்னி லியோன். இவர் தனக்கு சொந்தமான வெப்சைட்டில் கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை நோகடிப்பார்.
Sunny Leone
சோசியல் மீடியாவில் இவர் பகிரும் கவர்ச்சி புகைப்படங்கள் சர்ச்சையின் உச்சத்தை தொட்டதோடு இவரை இந்திய நாட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது.
Sunny Leone
கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த சன்னி லியோன்..ஆங்கில படங்களில் கலக்கி வந்ததை அடுத்து பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 என்ற திரைப்படத்தின் மூலம் கடந்த 2012ல் முதன்முதலாக பாலிவுட்டில் அறிமுகமானார்.
Sunny Leone
அதோடு தமிழில் வெளியான வடகறி படத்தில் கடந்த 2014-ம் ஆண்டு சிறப்பு தோற்றத்தில் நடித்ததன் மூலம் சன்னி லியோன் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
Sunny Leone
வடிவுடையான் இயக்கத்தில் ‘வீரமாதேவி’ என்னும் காவிய கதைக்களத்தில் சன்னி லியோன் நடித்ததற்கு பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பின.
Sunny Leone
இருந்தும் அசராத சன்னி லியோன் முன்றாவது முறையாக ‘சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும் புதிய தமிழ்படமொன்றில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Sunny Leone
ஓ மை கோஸ்ட்(OhMyGhost) என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் காமெடி-த்ரில்லராக உருவாகியுள்ளது. இதில் நடிகர் சதீஸ், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
Sunny Leone
சன்னி லியோன், சதீஷ், தர்ஷா குப்தா உள்ளிட்டோர் நடித்துள்ள ஓ மை கடவுளே சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து படக்குழு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் வெளியானதை அடுத்து தற்போது படத்தின் முதல் பார்வை அப்டேட் கூறப்பட்டுள்ளது. நாளை நடிகர் விஜய்சேதுபதி மற்றும் வெங்கட் பிரபு இந்த போஸ்டரை வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.