உலகநாயகனுக்கே நடிப்பில் சவால்விடும் 4 நடிகைகள்.. அவரே வியந்து பாராட்டியது தான் Highlight - ஒரு பார்வை!
தமிழ் தலைவுலகம் மட்டுமல்ல இந்திய திரை உலகத்திலேயே மிகச்சிறந்த நடிகராக திகழ்பவர் உலக நாயகன் கமல்ஹாசன் என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு சினிமா என்று வரும்பொழுது அவர் செய்யாத பணிகளே இல்லை என்று கூறலாம். உலக நாயகன் கமல்ஹாசன் ஆரம்ப காலத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய பிறகு நடனம், இசை, பாடல், இயக்கம், தயாரிப்பு, வசனம் இன்று பல துறைகளில் முன்னோடியாக திகழ்ந்து வந்தார், இன்றளவும் திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அவரோடு நடிக்கும் பொழுது சில நடிகைகள் அவருடைய நடிப்பையே மிஞ்சும் அளவிற்கு நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர் என்று கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா?. அதிலும் குறிப்பாக சில நடிகைகளின் நடிப்பை கண்டு கமல்ஹாசன் அவர்களே வியந்து பாராட்டி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
நடிகை ஊர்வசி, மைக்கேல் மதன காமராஜன் மற்றும் மகளிர் மட்டும் உள்ளிட்ட திரைப்படங்களில் கமல்ஹாசனோடு இணைந்து நடித்தவர். அவருடைய நடிப்பை கண்டு பல மேடைகளில் அவரை புகழ்ந்து பேசி உள்ளார் உலக நாயகன் கமல்ஹாசன்.
நடிகை சரிதா, அன்று தொடங்கி இன்று வரை பல முன்னணி நடிகர்களுடன் நடித்த சரிதா இறுதியாக சிவகார்த்திகேயனுக்கு தாயாக மாவீரன் திரைப்படத்தில் தோன்றியிருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நெற்றிக்கண், உலக நாயகன் கமல்ஹாசனுடன் மனோ சரித்திரா உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த ஒரு சூப்பர் ஹிட் நடிகை தான் அவர். தன்னை மிரட்டும் அளவிற்கு அவருடைய நடிப்பு இருக்கும் என்று பலமுறை அவரை பாராட்டி உள்ளார் உலகநாயகன் கமல்.
ஆரம்ப காலகட்டத்தில் கமல்ஹாசனுடன் ஒரு சில படங்களில் இணைந்து நடித்த நடிகை தான் வடிவுக்கரசி. இன்னும் சொல்லப் போனால் உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன் கூட இணைந்து நடித்து புகழ்பெற்ற ஒரு நடிகை தான் வடிவக்கரசி. இன்றளவும் வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை ஆகிய இரு உலகிலும் பயணித்து வரும் வடிவுக்கரசி, உலகநாயகன் கமல்ஹாசன் மட்டுமல்லாமல் பல சினிமா பிரபலங்களால் பாராட்டப்பட்டவர்.
கோவை சரளா, இவர் மலையாள மொழியை தாய்மொழியாக கொண்டவர் என்று கூறினால் அவ்வளவு எளிதில் யாரும் நம்பி விட முடியாது. அந்த அளவிற்கு மிக மிக நேர்த்தியாக கொங்கு தமிழை பேசக்கூடிய ஒரு மிகச்சிறந்த நடிகை. ஆரம்ப காலகட்டத்தில் பல நகைச்சுவை கதாபாத்திரங்கள் ஏற்று இளைய மனோரமா என்று அழைக்கப்படும் அளவிற்கு புகழ் பெற்றவர். உலகநாயகன் கமலஹாசனுடன் சதிலீலாவதி என்ற திரைப்படத்தில் இவர் நாயகியாக தோன்றியது குறிப்பிடத்தக்கது. உலகநாயகன் கமல்ஹாசன் இவரையும் பல மேடைகளில் வியந்து பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.