MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரபல காமெடி நடிகருக்கு மாரடைப்பு! ICU-வில் அனுமதி!

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட பிரபல காமெடி நடிகருக்கு மாரடைப்பு! ICU-வில் அனுமதி!

Benjamin: தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பிரபல நடிகர் பெஞ்சமினுக்கு திடீர் என மாரடைப்பு ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 21 2026, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்:
Image Credit : our own

நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்:

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல்... நெருங்க நெருங்க பரபரப்பும் அதிகரித்து வரும் நிலையில், திரைத்துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவலையை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேடை நாடகத்தில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர் தான் நகைச்சுவை நடிகராக அறியப்படும் பெஞ்சமின். நடிப்பை தாண்டி அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
தேர்தல் பிரச்சாரம்:
Image Credit : our own

தேர்தல் பிரச்சாரம்:

கடந்த சில நாட்களாக, பெஞ்சமின் சேலம் பகுதியில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். குறிப்பாக திமுக வேட்பாளர் ஆர். ராஜேந்திரன் அவர்களுக்கு ஆதரவாக மக்கள் சந்திப்பு, பேரணி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார். அதிக வெயில் காரணமாகவும், ஓய்வு இல்லாமலும் இருந்ததால் அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது.

34
திடீர் மாரடைப்பு:
Image Credit : our own

திடீர் மாரடைப்பு:

இந்த நிலையில் தான் ஏப்ரல் 20, அன்று நடந்த இருசக்கர வாகன பேரணியில் கலந்து கொண்டிருந்தபோது, திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அவர் பேசிக் கொண்டிருந்தபோதே உடல் பலவீனமடைந்து நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த கட்சித் தொண்டர்கள் உடனடியாக அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

44
மருத்துவர்கள் அறிவுறுத்தல்:
Image Credit : our own

மருத்துவர்கள் அறிவுறுத்தல்:

மருத்துவர்கள் இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, பெஞ்சமினுக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரியவந்தது. ஆனால் தற்போது அவர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார், உடல்நிலை சீராக இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறியுறுத்தி உள்ளனர்.  

நடிகர் பெஞ்சமின் தமிழில் பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தளபதி விஜயின் நண்பனாக திருப்பாச்சி, வெற்றிகொடிக்கட்டு போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவரது உடல்நிலை குறித்து ரசிகர்களும், நண்பர்களும், கவலை தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா
சினிமா காட்சியகம்
தமிழ் நடிகைகள்
தமிழ் சினிமா
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : முதல்வர் விஜய்யின் ‘கோட் சூட்’ ரகசியம்... அதன் பின்னணியில் இப்படியொரு குட்டி ஸ்டோரி இருக்கா...!
Recommended image2
Vijay : தமிழ்நாட்டில் மீண்டும் அதிகாலை 4 மணி ஷோ? தடைகளை உடைப்பாரா தளபதி... காத்திருக்கும் திரையுலகம்
Recommended image3
Ilaiyaraaja Music: "சொர்க்கமே என்றாலும்" பாட்டில் உள்ள இசை சூட்சமங்கள்.! தமிழ்நாட்டு பெருமையை எடுத்து சொன்ன கங்கை அமரன்! ஹேட் போனில் கேட்டுப்பாருங்க!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved