MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் டிவி 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் இருந்து திடீர் என வெளியேறிய முக்கிய நடிகை!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவி 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் இருந்து திடீர் என வெளியேறிய முக்கிய நடிகை!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் அனைத்துக்குமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், தற்போது முக்கிய சீரியலில் இருந்து பிரபல நடிகை வெளியேறியுள்ள சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Sep 04 2021, 03:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

பல தடைகள் வந்தாலும் அதனை உடைத்து எறிந்துவிட்டு, படித்தே தீர வேண்டும் என்கிற நினைப்பில் இருக்கும், ஒரு சாதாரண பெண்ணின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் தான் 'காற்றுக்கென்ன வேலி'. 
 

27

படிக்கும் வெண்ணிலாவின் ஆசையை புரிந்து கொள்ளாமல் திருமணத்திற்கு தந்தை ஏற்பாடு செய்வதால், வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய ஆசிரியையின் உதவியுடன் படிக்க நினைக்கிறார். இடையில் பல சங்கடங்கள், பல போராட்டங்கள் இவை அனைத்தையும் கடந்து எப்படி கல்லூரியில் சேர்கிறாள் வெண்ணிலா, கல்லூரியில் தாளாளரான ஹீரோவுக்கும் இவருக்கும் காதல் வளர்கிறது என்பது சுவாரஸ்யமாக எடுத்து செல்கின்றனர்.
 

37

வெண்ணிலா என்கிற கதாபாத்திரத்தில் பிரியங்கா  குமார் மிகவும் எதார்த்தமாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். ஹீரோவாக, ஏற்கனவே அரண்மனை கிளி சீரியலில் நடித்த சூர்யா தர்ஷன் நடித்து வருகிறார்.
 

47
kaatrukkenna veli

kaatrukkenna veli

மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில், ஜனனி அசோக் குமார், ஸ்ரீதேவி அசோக், மானெஸ் சாவளி, மாளவிகா அவினாஷ், மதன், ஷ்யாம் சுந்தர் என பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
 

57

ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி பேசும் இந்த விறுவிறுப்பான தொடரில் இருந்து தற்போது முக்கிய நடிகை ஒருவர் விளங்கியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
 

67
kaatrukkenna veli

kaatrukkenna veli

இந்த சீரியலில் பல புதுமுகங்கள், மற்றும் ஏற்கனவே சீரியலில் நாம் பலரை பார்த்திருந்தாலும், திரைப்படங்களிலும் பார்த்த முகமாக இருந்தவர் நடிகை மாளவிகா, சாரதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
 

77

தற்போது திடீர் என 'காற்றுக்கென்ன வேலி' சீரியலில் இருந்து அவர் விலகி உள்ளதாகவும் அவருக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்க கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு பதில் யார் நடிக்கிறார் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
Latest Videos
Recommended Stories
Recommended image1
ஜெயிலில் கம்பி எண்ணும் சந்திரகலா! துரோகம் செய்தாலும் பாசத்திற்காக அழும் சாமுண்டீஸ்வரி: கார்த்திகை தீபம் உருக்கமான திருப்பம்!
Recommended image2
ஃபர்ஸ்ட் போஸ்டர்லயே 3 பொண்ணுங்க! கென் கருணாஸை கலாய்த்த தனுஷ்! சிரிப்பலையில் ரசிகர்கள்!
Recommended image3
என் உயிருக்கு உயிரான ராஹா! - மகன் பற்றி முதல்முறை மனம் திறந்த ஜாய் கிரிசில்டா! நெகிழ வைக்கும் உருக்கமான பதிவு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved