MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தளபதிக்கு ஒரு கதை; 15 ஆண்டுகள் காத்திருந்தும் எடுக்க முடியல - வருத்தப்பட்ட அந்த இயக்குனர் யார் தெரியுமா?

தளபதிக்கு ஒரு கதை; 15 ஆண்டுகள் காத்திருந்தும் எடுக்க முடியல - வருத்தப்பட்ட அந்த இயக்குனர் யார் தெரியுமா?

Thalapathy Vijay : தளபதி விஜய் தனது கலை பயணத்தின் இருத்திக்காட்டில் பயணித்து வருகின்றார். அக்டோபர் 2025ல் அவருடைய 69வது படம் வெளியாகவுள்ளது.

2 Min read
Author : Ansgar R
Published : Oct 14 2024, 10:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Thalapaty Vijay

Thalapaty Vijay

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக கலைத்துறையில் பயணித்து வரும் முன்னணி நடிகர் தான் தளபதி விஜய். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மிகப்பெரிய முன்னெடுப்பாக தன்னுடைய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் அறிவிப்பை வெளியிட்டார். அது மட்டும் அல்லாமல் தான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இரு திரைப்பட பணிகளை முடித்தவுடன், முழுநேர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும். கலைத்துறைக்கு முழுமையாக ஓய்வு கொடுக்க உள்ளதாகவும் தளபதி விஜய் அறிவித்திருந்தார். 

அதன்படி ஏற்கனவே அவருடைய நடிப்பில் "தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்" திரைப்படம் வெளியாகிய நல்ல வசூல் சாதனை புரிந்த நிலையில், தற்பொழுது தனது 69ஆவது மற்றும் இறுதியில் திரைப்படத்தை பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் அவர் நடிக்க தொடங்கிவிட்டார். எதிர்வரும் 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

அட நம்புங்கப்பா.. நடிகர் சூர்யா சொந்த குரலில் இத்தனை பாடல்களை பாடியிருக்காராம்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
ravi mariya

ravi mariya

இந்த சூழலில் பிரபல நடிகரும், இயக்குனருமான ரவி மரியா, தளபதி விஜய்யுடனான தனது நட்பு குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். கடந்த 2000வது ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான "குஷி" திரைப்படத்தின் மூலம் கலை உலகில் தனது பயணத்தை இணை இயக்குனராக தொடங்கியவர் தான் ரவி மரியா. அதற்கு முன்னதாகவும் சில இயக்குனர்களிடம் இவர் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இந்த சூழலில் கடந்த 2002ம் ஆண்டு பிரபல நடிகர் ஜீவா, அறிமுகமான "ஆசை ஆசையாய்"  என்கின்ற திரைப்படத்தின் மூலம் ரவி மரியா இயக்குனராக களம் இறங்கினார். 

அந்த திரைப்படத்திற்கு பிறகு கடந்த 2019 வெளியான மிளகாய் என்கின்ற திரைப்படத்தையும் அவர் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களை தாண்டி இயக்குனராக அவர் பெரிய அளவில் திரைப்படங்களில் செயல்படவில்லை என்றாலும், கடந்த 24 ஆண்டுகளாக மிகச்சிறந்த நடிகனாக அவர் வலம்வந்து கொண்டிருக்கிறார்.

34
actor ravi mariya

actor ravi mariya

ஆரம்ப காலகட்டத்தில் மிகப்பெரிய அளவில் வில்லனாக நடித்து ரவி மரியா, கடந்த சில ஆண்டுகளாகவே நகைச்சுவை ததும்பும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் சித்ரா லட்சுமணனை சந்தித்து பேசிய அவர் "ஆசை ஆசையாய்"  திரைப்படத்திற்கு முன்னதாகவே குஷி திரைப்படம் முடிந்தவுடன், விஜய்க்கு தான் ஒரு கதையை கூறியதாகவும். கட்டாயம் நேரம் கிடைக்கும் பொழுது அந்த படத்தில் தான் நடிப்பதாக விஜய் கூறியதாகவும் ரவி மரியா கூறி இருக்கிறார். 

இருப்பினும் தொடர்ச்சியாக ஏதோ ஒரு வகையில் இந்த படம் தடைப்பட்டு கொண்டே வந்திருக்கிறது. "நான் கடந்த 2014 ஆம் ஆண்டு தளபதி விஜயோடு இணைந்து "ஜில்லா" என்கின்ற திரைப்படத்தில் நடித்தேன். அப்போது கூட செட்டில் என்னை பார்த்த உடனே என்னிடம் வந்து, என்ன அண்ணா உருண்டு பிரண்டு ஒரு கதை சொன்னிங்க, அது இன்னும் இருக்கா என்று என்னிடம் கேட்டார். உங்களுக்காக தான் தினமும் அந்த கதையை அயன் பண்ணி வைத்துக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் அதற்கான நேரம் அமையும் என்று கூறினேன்" என்றார் ரவி.

44
vijay and ravi

vijay and ravi

ஆனால் சுமார் 25 ஆண்டுகள் கடந்துவிட்டது என்றாலும் கூட இன்றளவும் அந்த திரைப்படத்தை ரவி மரியாவால் எடுக்க முடியவில்லை. இனியும் அது சாத்தியமாக போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விஜயோடு இணைந்து ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும், அவரை வைத்து என்னால் படம் ஒன்று எடுக்கமுடியாமல் போனது எனக்கு எப்போதுமே ஒரு குறையாக தான் இருக்கும் என்று கூறியுள்ளார் ரவி மரியா. 

என்னது 1000 கோடியா? குறைந்தது 2000 கோடி வசூல் - கங்குவா மீது காண்பிடெண்டாக உள்ள ஞானவேல் ராஜா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
தளபதி விஜய்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Enemy Of The Smuggler Review : எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர் மிரட்டலா? சொதப்பலா? முழு விமர்சனம் இதோ
Recommended image2
Akshitha : பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா அக்‌ஷிதா? டாஸ்கின் போது திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பு
Recommended image3
Food: அனிருத் இளமையாக இருப்பதற்கு இதுதான் காரணமா? சைவ உணவின் ரகசியம் என்ன? 10 வயது குறைவாக தோற்றமளிக்க உதவும் உணவுகள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved