MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வடிவேலு - பகத் பாசில் நடித்த ‘மாரீசன்’ ரிலீஸ் எப்போது? சர்ப்ரைஸாக அறிவித்த படக்குழு

வடிவேலு - பகத் பாசில் நடித்த ‘மாரீசன்’ ரிலீஸ் எப்போது? சர்ப்ரைஸாக அறிவித்த படக்குழு

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் வடிவேலுவும், பகத் பாசிலும் இணைந்து நடித்துள்ள மாரீசன் திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Apr 01 2025, 08:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Maareesan Release Date : 2023ல் வெளியாகி தென்னிந்தியா முழுவதும் கவனத்தை ஈர்த்த 'மாமன்னன்' படத்திற்குப் பிறகு வடிவேலுவும் ஃபஹத் ஃபாசிலும் இணைந்து நடிக்கும் படம் மாரீசன். 2024ல் அறிவிக்கப்பட்ட இப்படம் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. மாரீசன் படத்தின் வெளியீட்டு தேதியை பகத் பாசில் தன்னுடைய முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படம் 2025ம் ஆண்டு ஜூலையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை. பகத் பாசிலும் வடிவேலுவும் நேருக்கு நேர் நிற்கும் போஸ்டரையும் படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

24

மாரீசன் ரிலீஸ் தேதி

சுதீஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் மாரீசன். மாமன்னன் தீவிரமான சாதி அரசியலைப் பேசிய பொலிட்டிக்கல் டிராமா என்றால், மாரீசன் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் உள்ள ஒரு ரோட் மூவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சூப்பர் குட் ஃபிலிம்ஸின் கீழ் ஆர்.பி.சௌத்ரி இப்படத்தை தயாரிக்கிறார். இதற்கு முன்பு சுதீஷ் சங்கர், தமிழில் ஆறுமனமே, திலீப் நடித்த மலையாளப் படம் வில்லாளி வீரன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.  

இதையும் படியுங்கள்... அசத்துறாரே பா.. கேப் விடாமல் படங்களை அடுக்கும் "வைகைப்புயல்" - பகத் பாசிலுடன் மீண்டும் ஒரு சம்பவம்!

34

மாரீசன் படக்குழு

திரையுலகிற்கு பல ஹிட் படங்களை வழங்கியுள்ள சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 98வது படம் மாரீசன். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை ஸ்ரீஜித் சாரங் கவனிக்கிறார். இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா பணியாற்றி உள்ளார். மாமன்னன் படத்தை போல் இந்த படத்திலும் வடிவேலுவுக்கு சீரியஸான ரோலாக இருக்கும் என கூறப்படுகிறது. பயணத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகி இருக்கிறது.

44

பகத் பாசில் - வடிவேலு கூட்டணி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் மாமன்னன். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஓடிடி வெளியீட்டிற்குப் பிறகும் பரவலாக பேசப்பட்டது. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த உதயநிதி ஸ்டாலினை விட பகத் பாசில் நடித்த வில்லன் கதாபாத்திரம் பாராட்டப்பட்டது, இது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது. பகத்தின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் புஷ்பா 2. இப்படம் உலகளவில் ரூ.1800 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 

இதையும் படியுங்கள்... Fahadh Faasil : நடிகர் பகத் பாசிலுக்கு இப்படி ஒரு அரியவகை நோய் பாதிப்பா? ஆவேஷம் ஹீரோ வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
வடிவேலு
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
எதிரிகளாக இருந்த MGR - கண்ணதாசன்! ஒரே பாடலில் Friends ஆக மாறிய கதை தெரியுமா?
Recommended image2
டாக்ஸிக் படத்திற்காக யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Recommended image3
ஏத்திவிட்ட மீனா... குதிரைக் கொம்பாக நிற்கும் கோமதி; மனம் இறங்கினாரா பாண்டியன்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved