“ஏ.ஆர்.ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர்”... முதலமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல்...!
வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கரீமா பேகம், இன்று காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் இசை ஞானத்தை கண்டறிந்து சின்ன வயதில் இருந்தே அதை அவர் வளர்த்துக் கொள்ளவும், தற்போது புகழின் உச்சியில் மிளிரவும் உறுதுணையாக இருந்தவர் அவருடைய தாயார் கரீமா பேகம்.
ஏ.ஆர்.ரகுமானின் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற கரீமா பேகம் இன்று உடல் நலக்குறைவால் காலமானார். வயது மூப்பு காரணமாக நீண்ட நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கரீமா பேகம், இன்று காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் தனது தாயாரின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட இசையுலகினர், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் தாயார் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பதிவிட்டுள்ளார். “ இசைத்துறையின் ஜாம்பவான் இசையமைப்பாளர் திரு.A.R.ரஹ்மான் அவர்களின் அன்புத்தாயார் திருமதி.கரீமாபேகம் அவர்கள் உடல்நலக் குறைவால் காலமான செய்தி அறிந்து மனவேதனை அடைந்தேன். தாயாரின் பிரிவால் மிகுந்த துயருற்றிருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்!” என குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தனது ட்விட்டரில், இசைப்புயல்
ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் தாயார் கரீமா பேகம் அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!
இசையமைப்பில் உச்சம் தொட்டு ஆஸ்கர் வரை உலகப் புகழினை பெற்றிடும் வகையில் ரகுமானை ஆளாக்கியதில் பெரும்பங்கு வகித்தவர் அம்மையார்.
இழப்பில் துயர் அடைந்திருக்கும் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஆறுதல்! என பதிவிட்டுள்ளார்.