MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • SS Stanley: பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! என்ன ஆச்சு?

SS Stanley: பிரபல இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! என்ன ஆச்சு?

பிரபல இயக்குனரும், நடிகருமான எஸ் எஸ் ஸ்டான்லி சிறுநீரக பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

2 Min read
Author : manimegalai a
| Updated : Apr 15 2025, 11:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

ஏப்ரல் மாதத்தில் பட இயக்குனர் மறைவு:

இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின்னர் 2002 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்', திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

24
Director SS Stanly:

Director SS Stanly:

முதல் படமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட்:

இவருடைய முதல் படமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகாவுடன் இணைந்து காயத்ரி ஜெயராம், வெங்கட் பிரபு, தேவன், கருணாஸ், டேனியல் பாலாஜி, மயில்சாமி, பாவா லட்சுமணன், கொட்டாச்சி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கல்லூரி காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

34
Dhanush Movie Director:

Dhanush Movie Director:

புதுக்கோட்டை சரவணன்:

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து புதுக்கோட்டை சரவணன் திரைப்படத்தை இயக்கினார் எஸ் எஸ் ஸ்டான்லி.  2004 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அதிகம் பேசப்பட்டது. பின்னர் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து மெர்குரி பூக்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில்... திரைப்பட இயக்கத்தில் இருந்து விலகி நடிகராக சில படங்களில் நடிக்க தொடங்கினார்.

44
Kidney Problem

Kidney Problem

சிறுநீரக பிரச்சனையால் உயிரிழப்பு:

சிறுநீரக பிரச்சனையால் உயிரிழப்பு:

அந்த வகையில் பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, ஆண் தேவதை, 6 அத்தியாயம், சர்க்கார், போன்ற சில படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'மகாராஜா' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

நடிகர் வைபவ் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து 'ஆதாம் ஆப்பிள்' என்கிற திரைப்படத்தை இயக்க ஸ்டான்லி முயற்சி செய்து வந்த நிலையில், அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி (57) சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.  ஆனால் சிகிச்சை இவர் இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கத்தில் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved