கருப்பன் வரான் வழி மறிக்காதே – குசும்புத்தனமா பதிவிட்ட ஆர்ஜே பாலாஜி; கருப்பு டீசரா?
RJ Balaji Gives Suriya Karuppu Movie Update in Tamil : சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படத்தின் டீசர் வரும் 23 ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஆர்ஜே பாலாஜி அறிவித்துள்ளார்.

கருப்பு படத்தின் டீசர்
RJ Balaji Gives Suriya Karuppu Movie Update in Tamil : தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சூர்யா. ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த சூர்யா வரிசையாக தோல்வி படங்களை கொடுத்தார். சிங்கம் படத்திற்கு பிறகு தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா என்று வரிசையாக தோல்வி படங்களை கொடுத்தார். தற்போது ரெட்ரோ, கருப்பு மற்றும் சூர்யா 46 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
சூர்யா மற்றும் ஆர்ஜே பாலாஜி
இந்த நிலையில் தான் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கருப்பு படம் குறித்து முக்கியமான அறிவிப்பு வெளியானது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் இந்தப் படம் உருவாகி வருகிறது. சூர்யா, த்ரிஷா, சுவாஸிகா, நட்டி சுப்பிரமணியம், யோகி பாபு ஆகியோர் பலர் நடித்துள்ளனர். சாய் அபாயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
சூர்யாவின் கருப்பு மூவி
இந்த நிலையில் தான் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தனது எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு குறித்து முக்கியமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கருப்பன் வரான் வழி மறிக்காதே என்று பதிவிட்டு போஸ்டரில் 23.7.2025 என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த போஸ்டரில் கண்ணாடியும் குதிரையின் உருவப் படத்தையும் பதிவிட்டுள்ளார். ஆனால், கருப்பன் வரான் என்று குறிப்பிட்டது படத்தின் டீசரா, சிங்கிள் டிராக்கா என்பது குறித்து பதிவிடவில்லை.
கருப்பு அப்டேட் கொடுத்த ஆர்ஜே பாலாஜி
உண்மையில் கருப்பன் கிராம தெய்வமான கருப்பசாமியை குறிக்கிறது. கருப்பசாமியை கருப்பர், கருப்பு என்று அழைப்பது உண்டு. கருப்பன் வரான் வழி மறக்காதே என்பதற்உ கருப்பன் வருகிறார், வழியை மறக்காதே என்பது தான். இது கிராம தெய்வமான கருப்பசாமியை வழிபடும் போது பயன்படுத்தப்படும் பொதுவான கூற்று.
கருப்பன் வரான் வழி மறிக்காதே
மேலும், கருப்பசாமியை வருகையை வரவேற்கும் விதமாகவும், அவர் வழி தவறிவிடாமல் இருக்கவும் இந்த சொல் கருப்பன் வரான் வழி மறிக்காதே" என்றால், "கருப்பன் வருகிறார், வழி மறிக்காதீர்கள்" என்று பொருள். இது பொதுவாக கருப்பசாமி என்ற கிராம தெய்வத்தை வழிபடும்போது பயன்படுத்தப்படும் ஒரு கூற்று. கருப்பசாமியின் வருகையை வரவேற்கும் விதமாக இந்த வாக்கியம் குறிப்பிடப்படுகிறது.
கருப்பன் வரான் வழி மறிக்காதே 🔥#Karuppupic.twitter.com/AL61DGpbZa
— RJB (@RJ_Balaji) July 21, 2025