இயக்குனர் சேரனை கலங்க வைத்த 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் பிரபலத்தின் திடீர் மறைவு!
நேற்று மாரடைப்பு காரணமாக, பல்வேறு திரைப்படங்களிலும், 'பாண்டியன் ஸ்டோர்' உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்த நெல்லை சிவா உயிரிழந்த நிலையில், இயக்குனர் சேரன் இவருக்கு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கொரோனா நெருக்கடி காலத்தில் அடுத்தடுத்து திரையுலகினர் மரணிக்கும் செய்திகள் மக்களை பெருச்சோகத்தில் ஆழ்த்தி வருகிறது.

வள்ளியூர் வேப்பிலான்குளத்தை சேர்ந்த நகைச்சுவை நடிகர், கிணற்றை காணோம் புகழ் நெல்லை சிவா நேற்று மாரடைப்பால் மரணமடைந்தார்.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதால், தமிழக அரசு முழு ஊரடங்கு இரண்டு வாரங்களுக்கு அறிவித்துள்ளது. இதனால், திரைப்பட படப்பிடிப்புகள் அனைத்தும் முடங்கியுள்ள காரணத்தினால் பிரபல திரைப்பட துணை நடிகர், கிணற்றை காணோம் புகழ் மற்றும் திருநெல்வேலி பாஷையில் பேசி நடித்து அசதிவந்த நெல்லை சிவா தனது சொந்த மாவட்டமான நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பாஸ்கர புறத்திலுள்ள தனது சகோதரியின் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்நிலையில், திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இவரது மரணம் திரை உலகத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தன்னுடைய பல படங்களில் நடித்துள்ள நெல்லை சிவா குறித்து மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார், இயக்குனர் சேரன்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், என்னுடைய பல திரைப்படங்களில் பணியாற்றி இருக்கிறார்.. இவரின் நெல்லை தமிழ் அழகு.. கட்டபொம்மனின் முழு வசனத்தையும் நெல்லைத்தமிழில் பேசி என் சிந்தனைகளை வேறுபக்கம் யோசிக்க வைத்தவர். வடிவேலு, விவேக் இவர்களுடனான கூட்டணியில் அதிகம் நடித்திருக்கிறார். ஆத்மா அமைதிகொள்ளட்டும். என பதிவிட்டுள்ளார்.

மேலும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் பிரபலங்கள், இவருடன் நடித்த நடிகர்கள், ரசிகர்கள் என பலரும் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.