MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய அட்லீ... ஜவான் பார்த்து மெர்சலாகி சம்பளத்தை வாரி வழங்கிய ஷாருக்கான்!

கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய அட்லீ... ஜவான் பார்த்து மெர்சலாகி சம்பளத்தை வாரி வழங்கிய ஷாருக்கான்!

ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கும் அட்லீ, அப்படத்திற்காக வாங்கிய சம்பள விவரம் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Jul 12 2023, 08:48 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Atlee

Atlee

தமிழில் அடுத்தடுத்து 4 பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த அட்லீ, தற்போது பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ளார். இந்தியில் அவர் இயக்கி உள்ள முதல் படம் ஜவான். இப்படத்தில் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்துள்ள இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

24

ஜவான் திரைப்படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால், அப்படத்தின் புரமோஷன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட ஜவான் படத்தின் Prevue இணையத்தில் படு வைரலாகி வருகிறது. குறிப்பாக ஒரே நாளில் அனைத்து சமூக வலைதளங்களிலும் சேர்த்து 112 மில்லியனுக்கு மேல் பார்வைகளைப் பெற்று ஜவான் படத்தின் முன்னோட்டம் சாதனை படைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... ரஜினி, அஜித், விஜய், கமல் உள்ளிட்ட பெரிய நடிகர்களுக்கு... திரையரங்கு உரிமையாளர்கள் வைத்த கோரிக்கை!

34

இந்த முன்னோட்டம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது. ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருப்பதால் இப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. கடைசியாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. அந்த சாதனையை ஜவான் படம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

இந்நிலையில், ஜவான் படத்திற்காக இயக்குனர் அட்லீ வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இது அட்லீக்கு பாலிவுட்டில் முதல் படமாக இருந்தாலும், அவரின் திறமையை பார்த்து வியந்துபோன ஷாருக்கான், அவருக்கு சம்பளத்தை வாரி வழங்கி இருக்கிறார். அதன்படி ஜவான் படத்திற்காக இயக்குனர் அட்லீக்கு ரூ.40 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் காஸ்ட்லி இயக்குனராக உருவெடுத்துள்ளார் அட்லீ. ஜவான் படத்தை ஷாருக்கான் தான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ரூல்ஸ் மீறிய நடிகர் விஜய்.. வைரலான வீடியோ.. தளபதி மீது அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போக்குவரத்து போலீசார்..!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஷாருக் கான்

Latest Videos
Recommended Stories
Recommended image1
மகாநதி சீரியல் முடியப்போகுதா? விஜய் - காவேரிக்கு என்ன ஆச்சு? யாரும் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
ரீ-ரிலீஸில் கில்லியிடம் தோற்றுப்போன மங்காத்தா... பாக்ஸ் ஆபிஸ் ஆட்டம் ஓவர் - ஒட்டுமொத்த வசூலே இவ்வளவுதானா?
Recommended image3
Salman Khan: சினிமாவை விட்டு விலகுகிறாரா சல்மான் கான்? என்னப்பா நடக்குது பாலிவுட்டில்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved