என்னது சாக்‌ஷி அகர்வால் இப்படி குண்டா கொழு கொழுன்னு இருந்தாங்களா?... இந்த போட்டோவை பார்த்தால் நம்பவேமாட்டீங்க!

First Published 10, Jul 2020, 6:24 PM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலமாக பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி. அம்மணி என்னதான் காலா, விஸ்வாசம் என முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருந்தாலும் கைகொடுத்தது என்னமோ பிக்பாஸ் தான். பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ற பிரபலங்களை விட இவரின் கைவசம் தான் அதிக படங்கள் உள்ளன. என்ன தான் கைவசம் டஜன் கணக்கில் பட வாய்ப்புகள் இருந்தாலும் இன்ஸ்டாவில் கவர்ச்சி கிளிக்குகளை தட்டிவிடுவதை நிறுத்துவதே இல்லை.

தற்போது பார்க்க அழகாக மெழுகு சிலை போல் இருக்கும் சாக்‌ஷி அகர்வால் பள்ளி காலத்தில் ஓவராக வெயிட் போட்டு குண்டாக இருந்ததாக ஷாக்கிங்கான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ராய் லட்சுமியுடன் சிண்ட்ரெல்லா, ஆர்யாவின் டெடி என சாக்‌ஷி அகர்வாலுக்கு பட வாய்புகள் குவிகிறது.  ஒரு பக்கம் பட வாய்ப்புகள் அதிகரிக்க, அதிகரிக்க சாக்‌ஷியின் உடை அளவும் குறைந்து கொண்டே செல்கிறது.

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கும் சாக்‌ஷி, டைட் உடையில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு இளசுகளின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறார்.

லாக்டவுன் நேரத்தில் சாக்‌ஷி செய்யும் உடற்பயிற்சிகளை பார்த்து பலருக்கும் தான் பிட்டாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். அப்படிப்பட்ட சாக்‌ஷி அகர்வால் தன்னுடைய சின்ன வயசு போட்டோ ஒன்றை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

இது ஒரே ஆள் தான் என்று எத்தனை பேர் நம்புகிறீர்கள்? இது நான் தான். இரண்டுமே. முகத்தில் இருக்கும் கொழுப்பை குறைப்பது தான் பெரிய சவாலாக இருந்தது. பள்ளியில் என் வகுப்பில் படித்தவர்கள், சீனியர்கள் என்னை கிண்டல் செய்திருக்கிறார்கள். அதில் சிலர் என்னை புத்தக புழு என்றும், பலர் குண்டு பூசணிக்காய் என்றும் கலாய்த்தனர். ஆனால் படிப்பு மட்டும் தான் எனக்கு அப்பொழுது குறியாக இருந்தது.

நான் பள்ளி முதல் எம்.பி.ஏ. வரை படிப்பில் அனைவரையும் முந்தினேன். நான் சப்பியாக இருந்ததை விரும்பினேன். நான் இதை எனக்காக செய்ய முடிவு செய்தேன். (நான் இப்போதும் அப்படித்தான் இருக்கிறேன்)

நான் ஒரு நாளும் பட்டினி கிடந்தது கிடையாது. அறுவை சிகிச்சை உட்பட செயற்கையாக எதையுமே செய்தது இல்லை. அதனால் தான் அதிக காலம் எடுத்தது. எனக்கு என்னை மிகவும் பிடித்துள்ளது. கடின உழைப்பு, விடா முயற்சி, அர்ப்பணிப்பு இருந்தால் வாழ்க்கையில் சாதிக்கலாம்.

ஒரு விஷயத்தை தீர்மானித்து அதில் கவனம் செலுத்தினால் அதை அடைய பிரபஞ்சம் உங்களுக்கு வழி காட்டும். நான் தற்போது சரியான இடத்தில் இருக்கிறேன். கல்லூரி காலத்தில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட பெருமைப்படுகிறேன். ஏனென்றால் சில ஆண்டுகளுக்கு முன்பு இப்படி செய்திருக்க மாட்டேன்.

நீங்கள் சாதித்த பிறகு உங்களை விமர்சித்தாலோ, கிண்டல் செய்தாலோ அதை கண்டுகொள்ள வேண்டாம். தளபதி அப்படித் தானே சொன்னார், சரியா என்று தெரிவித்துள்ளார். இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சாக்‌ஷி பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் செம்ம லைக்குகளை குவித்து வருகிறது.

loader