தமிழ் மாணவன்..தெலுங்கு வாத்தி..வேறலெவலில் வெளியான தனுஷ் பட அப்டேட்..
சினிமாவில் 20 ஆண்டுகளை கொண்டாடி வரும் தனுஷ் சமீபத்தில் நடித்து வரும் வாத்தி படத்திலிருந்து மிக முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் தாறுமாறாக வைரலாக்கி வருகின்றனர்.

dhanush
இயக்குனர் கஸ்தூரி ராஜாவின் மகனான தனுஷ், கடந்த 2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படத்தில் பல விமரசங்களை சந்தித்த தனுஷ் இன்று எல்லாவற்றையும் முறியடுத்து சூப்பர் ஹீரோவாகியுள்ளார்.
dhanush
கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் திரையுலகிலும் கலக்கி வரும் தனுஷ், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என ரசிகர்கள் மனதில் ஸ்ட்ராங்காக இடம் பிடித்துவிட்டார்.
dhanush
சினிமாவிற்கு அறிமுகமாகி 20 ஆண்டுகளை கொண்டாடி வரும் தனுஷ் இதுகுறித்து நெகிழ்ச்சியான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் இது நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றும், கனவில் கூட இதெல்லாம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை என கூறியுள்ள தனுஷ், தனது ரசிகர்களுக்கும், இயக்குனர்கள் மற்றும் தனது தயாரிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
dhanush
தனுஷ் 20 வது கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தனுஷ் தற்போது நடித்து வரும் வாத்தி படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில் தனுஷ் அறிமுகமான முதல் படம் துள்ளுவதோ இளமை படத்திலிருந்து தனுஷின் மாணவன் தோற்றம் மற்றும் வாத்தியின் தோற்றம் உள்ளது. அதோடு வாத்தி பர்ஸ்ட் லுக் விரைவில் என குறிப்பிடப்பட்டுள்ளது.
dhanush
சமீபத்தில் தனுஷ் கைவசம் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன்வாத், தி என அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமிக்கியுள்ளார். இதில் வாத்தி மூலம் நடிகர் தனுஷ் டோலிவுட்டில் அறிமுகம் ஆகி உள்ளார்.
dhanush
இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்க, நாக வம்சி மற்றும் சாய் சௌஜன்யா ஆகியோர் தயாரிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது.
dhanush
இந்த ஆண்டு துவக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியது. படப்பிடிப்பு தளத்தில் இளமை தோற்றத்தில் நடிகர் தனுஷ் கெத்தாக நிற்கும் புகைப்படத்தை படக்குழு வெளியிட்டிருந்தது.
dhanush
தற்போது வெளியாகியுள்ள வாத்தி போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் தாறுமாறாக வைரலாகி வருகிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.