MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வாத்தி இசை வெளியீட்டு விழாவில் பட்டு வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசை தாடியுடன் மகன்களுடன் கெத்து காட்டிய தனுஷ்!

வாத்தி இசை வெளியீட்டு விழாவில் பட்டு வேஷ்டி சட்டையில் முறுக்கு மீசை தாடியுடன் மகன்களுடன் கெத்து காட்டிய தனுஷ்!

தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று பிரம்மாண்டமாக நடந்துள்ளது.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 04 2023, 08:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
வாத்தி

வாத்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தனுஷ். துள்ளுவதோ இளமை என்ற படம் மூலமாக நடிகராக அறிமுகமான தனுஷ் தற்போது நடிகர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணி பாடகர், தயாரிப்பாளராகவும் திகழ்கிறார்.

28
தனுஷ்

தனுஷ்

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி மற்றும் இங்கிலிஸ் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவிலும் நேரடியாக கால் பதித்துள்ளார். தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள வாத்தி என்ற படத்தில் வாத்தியாராக பாலமுருகன் என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

38
சம்யுக்தா மேனன்

சம்யுக்தா மேனன்

இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இவர்கள் தவிர, சமுத்திரக்கனி, சாய்குமார், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

48
வாத்தி ரிலீஸ் தேதி

வாத்தி ரிலீஸ் தேதி

வாத்தி படம் வரும் 17 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று வாத்தி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது. வாத்தி இசை வெளியீட்டு விழாவிற்கு தனுஷ் முறுக்கு மீசை தாடியுடன், பட்டு வேஷ்டியில் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா உடன் வருகை தந்துள்ளார்.

58
வாத்தி

வாத்தி

தனுஷ் ஒவ்வொரு படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு பாரம்பரிய உடையான வேஷ்டி சட்டையில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ள மொத்த பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. வா வாத்தி, நாடோடி மன்னன், கலங்குதே, ஒன் லைஃப், சூரிய பறவைகளே ஆகிய பாடல்கள் வாத்தி படத்தில் இடம் பெற்றுள்ளது.

68
வா வாத்தி

வா வாத்தி

வா வாத்தி பாடலை ஸ்வேதா மேனன் பாடியுள்ளார். இந்தப் பாடலுக்கு தனுஷ் பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். நாடோடி மன்னன் பாடலை அந்தோனி தாசன் பாடியிருக்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

78
கலங்குதே

கலங்குதே

கலங்குதே பாடலை விஜய் யேசுதாஸ் பாடியிருக்கிறார். யுகபாரதி பாடல் வரிகள் கொடுத்துள்ளார். ஒன் லைஃப் பாடலை ஸ்டீபன் ஷெரையா மற்றும் அறிவு பாடியுள்ளனர். 

88
சூரிய பறவைகளே

சூரிய பறவைகளே

தனுஷ் மற்றும் அறிவு பாடல் வரிகள் அமைத்துள்ளனர். சூரிய பறவைகளே என்ற பாடலை திப்பு மற்றும் ரவி ஜி பாடியுள்ளனர். யுகபாரதி பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார். வாத்தி படத்தைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் என்ற கேப்டன் மில்லர் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
5 லட்சம் பட்ஜெட், 800 மில்லியன் வியூஸ், 3 கோடி வருமானம்.! தமிழ் மட்டுமல்ல இந்தியாவையே ஆட்டி படைக்கும் ஹிட்டு சாங்.!
Recommended image2
Vijay Deverakonda Wedding : அம்மாடி எவ்வளவு அழகு.! இதுவரை பார்க்காத போட்டோக்களை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா.!
Recommended image3
காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாண்டியன்; அன்பால் ஒன்றிணைந்த கோமதி அண்ட் பாண்டியன்: Pandian Stores 2 சீரியலில் மலரும் க்யூட் ரொமான்ஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved