MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • நடிகை தீபிகா படுகோனுக்கு 95-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் கிடைத்த மிகப்பெரிய கௌரம்..! குவியும் வாழ்த்து..!

நடிகை தீபிகா படுகோனுக்கு 95-ஆவது ஆஸ்கர் விருது விழாவில் கிடைத்த மிகப்பெரிய கௌரம்..! குவியும் வாழ்த்து..!

பிரபல பாலிவுட் நடிகையான தீபிகா படுகோன், 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்குபவர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்பட்டு வருவதோடு பலர், தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

1 Min read
Author : manimegalai a
Published : Mar 03 2023, 08:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Deepika Padukone

Deepika Padukone

பெங்களூரைச் சேர்ந்த நடிகை தீபிகா படுகோன், கன்னட முன்னணி நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்கிற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பாலிவுட் திரையுலக சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு ஜோடியாக 'ஓம் சாந்தி ஓம்' என்ற படத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர். இவரின் முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்ததால், அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தது.

24

குறிப்பாக பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வரலாற்று காவியமாக வெளியான பாஜிராவ் மஸ்தானி, பத்மாவத், ராம் - லீலா போன்ற படங்கள் இவருடைய திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. நடிகை தீபிகா படுகோனே சௌந்தர்யா ரஜினிகாந்த் 3டி தொழில்நுட்பத்தை கொண்டு, தன்னுடைய தன்னை ரஜினிகாந்தை ஹீரோவாக வைத்து இயக்கிய கோச்சடையான் படத்தில், ஹீரோயினாக நடித்திருந்தார்.

குக் வித் கோமாளியில் இருந்து மணிமேகலை விலகியது ஏன்..? காட்டமாக பதிலளித்த புகழ்..!

34

இந்நிலையில் ஏற்கனவே தீபிகா படுகோன் கேன்ஸ் திரைப்பட விழாவில் நடுவராக இருந்தது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக பார்க்கப்பட்ட நிலையில், தற்போது தீபிகா படுகோன் விரைவில் நடைபெறவுள்ள 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு விருதை வென்ற பிரபலங்களுக்கு அவ் விருதுகளை வழங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் ஆஸ்கர் தரப்பில் இருந்து வெளியாகி உள்ளது.
 

44

மேலும் இந்த பட்டியலில், எமிலி பிளண்ட், சாமுவேல் எல். ஜாக்சன், டுவைன் ஜான்சன், மைக்கேல் பி. ஜோர்டான், ஜானெல்லே மோனே, ஸோ சல்டானா, ஜெனிஃபர் கான்னெல்லி, ரிஸ் அஹமட், மெலிசா மெக்கார்த்தி உள்ளிட்ட நடிகர்கள் இந்த விருது வழங்குபவர்கள் பட்டியலில் உள்ளனர். 95வது ஆஸ்கார் விருதுகள் விழா ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 12, 2023 அன்று லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

உறுப்பு மாற்று செய்யப்பட்ட பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்! திரையுலகில் பரபரப்பு!
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
தாய் கிழவியை துரத்திவிட்ட சக்திவேல்... காந்திமதிக்கு அடைக்கலம் தரும் கோமதி - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்
Recommended image2
விஜய் - சங்கீதா குடும்பத்தை கெடுத்தவர் நீங்கதான்... த்ரிஷா மீது அதிகரிக்கும் சைபர் அட்டாக்..!
Recommended image3
பிளாப் ஆன ரோகிணியின் பிளாக்மெயில் டிராமா... மனோஜ் கிரேட் எஸ்கேப் - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved