MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

40 வயதில் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த முன்னணி நடிகை – ரசிகர்கள் வாழ்த்து மழை!

Deepika Padukone: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன், தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை, அதிகார பூர்வமாக உறுதி செய்துள்ளதை தொடர்ந்து, வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

1 Min read
Author : Rsiva kumar
Published : Apr 19 2026, 03:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும் தீபிகா
Image Credit : Asianet News

திருமணத்திற்கு பின்னரும் நடித்து வரும் தீபிகா

திருமணத்திற்கு பின்னரும் முன்னணி ஹீரோயினாக தொடர்ந்து நடித்து வரும் சில நடிகைகளில் தீபிகா படுகோனும் ஒருவர். தனது திறமையான நடிப்பாலும், தனித்துவமான குணாதிசயங்களாலும் ரசிகர்களின் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்-குடன் காதலில் இருந்த இவர், அதை வெளிப்படையாக அறிவிக்காமல் 2018 ஆம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டார்.

25
 8 மணி நேரம் மட்டுமே வேலை
Image Credit : instagram

8 மணி நேரம் மட்டுமே வேலை

திருமணத்திற்கு பின்னரும் சினிமாவில் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்தார். குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான ‘கல்கி 2829 AD', 'ஜவான்,’ போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெற்றன. திருமணத்திற்கு பிறகு தினமும் 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்வேன் என தெரிவித்தது சில சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும், பலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

35
தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதி
Image Credit : instagram

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதி

தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதியினருக்கு ஏற்கனவே துவா என்ற மகள் உள்ளார். தற்போது தங்களது குடும்பத்தில் இன்னொரு குழந்தை வர உள்ளதை, தீபிகா சமூக வலைத்தளத்தில் புகைப்படம் மூலம் உறுதி செய்துள்ளார். இதையடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

45
40 வயதில் 2-ஆவது கர்ப்பம்
Image Credit : instagram

40 வயதில் 2-ஆவது கர்ப்பம்

தீபிகா மற்றும் ரன்வீர் சிங் தம்பதியினர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை அதிகம் வெளிப்படுத்தாமல் பாதுகாப்பாக வைத்திருப்பதையே விரும்புகின்றனர். இருப்பினும், சில முக்கியமான தருணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வது இவர்களின் வழக்கமாக உள்ளது. அந்த வகையில், 40 வயதில் இரண்டாவது முறையாக தாயாக உள்ளதை தீபிகா தற்போது அறிவித்துள்ளார்.

55
ராக்கா:
Image Credit : instagram

ராக்கா:

மேலும், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘ராக்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார். அதேபோல், சில பட வாய்ப்புகளை தவிர்த்துள்ளார் என்ற தகவலும் உறுதியாக தெரியவில்லை.

தற்போது கர்ப்பமாக உள்ளதால், தீபிகா படுகோன் ஓய்வில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி, பல பிரபலங்களும் தொடர்ந்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
அல்லு அர்ஜுன்
அட்லீ
தமிழ் சினிமா
தமிழ் நடிகைகள்
சினிமா
சினிமா காட்சியகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
விஜய்-சங்கீதா விவாகரத்து விவகாரம்: ரூ.250 கோடி கேட்ட சங்கீதாவிற்கு ரூ.35 கோடி செட்டில்மென்ட்டா? வெளியான முக்கிய தகவல்!
Recommended image2
கண்கலங்க வைக்கும் பாரதிராஜாவின் தற்போதைய நிலை – ‘தாய் கிழவி’க்கு சொன்ன வாழ்த்து!
Recommended image3
விவாகரத்து வழக்கில் எதிர்பாராத ட்விஸ்ட்.. திடீரென முடிவை மாற்றிய சங்கீதா? விஜய் ஹேப்பி.. உற்சாகத்தில் தொண்டர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved