Singer : புதிய அவதாரம் எடுத்த புகழ் – சொந்த படத்திலேயே இப்படியொரு வாய்ப்பா?
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான புகழ் இப்போது புதிய அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார்.

நடிகர் புகழ் பாடகர்
CWC Fame Pugazh become Singer : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக இன்று ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகராக உயர்ந்து இருப்பவர் விஜய் டிவி புகழ். இவர் குக் வித் கோமாளி புகழ், விஜய் டிவி புகழ், பரட்டை புகழ் என்று பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவின் மூலமாக பிரபலமான புகழ் இன்று சைலண்டாக பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாகவும் நடித்திருக்கிறார்.
சிக்ஸர் மூவி, லட்சுமி மூவி மேக்கர்ஸ்
சிக்ஸர் படம் மூலமாக சினிமாவில் அறிமுகமான புகழ், தா தா 87, கைதி, காக்டைல், சப்வே, என்ன சொல்ல போகிறாய், வலிமை, எதற்கும் துணிந்தவன், வீட்ல் விசேஷம், யானை, ஏஜெண்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, கடைசி காதல் கதை, அயோத்தி என்று பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார்.
லட்சுமி மூவி மேக்கர்ஸ்
சமீபத்தில் விமல் நடிப்பில் திரைக்கு வந்த தேசிங்கு ராஜா 2 படத்தில் பெண் வேடத்திலும் அதுவும் காவல் அதிகாரியாக நடித்திருந்தார். இந்த கெட்டப் போடுவதற்கு துணிச்சலும், தைரியமும் இருக்க வேண்டும். அந்த சூழலில் அதனை ஏற்று கச்சிதமாக படத்திற்கு என்ன தேவையோ அப்படியே கொடுத்துள்ளார்.
புதிய அவதாரம் எடுத்த புகழ்
இதுவரையில் ஏராளமான படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த புகழ் மிஸ்டர் ஜூ கீப்பர் (Mr Zoo Keeper) என்ற படத்தின் மூலமாக ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில் தான் புகழ் நடிக்கும் புதிய படம் ஒன்றில் அவர் பாடகராகவும் அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவனம் தயாரிக்கும் 27ஆவது படம். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்தில் இடம் பெற்ற ஆட்டம் போட வைக்கும் பாடல் ஒன்றை தான் புகழ் பாடியிருக்கிறார்.
குக் வித் கோமாளி புகழ் - பாடகரான புகழ்
இந்தப் பாடல் மூலமாக புகழ் முதல் முறையாக பின்னணி பாடகராக அறிமுகமாகியுள்ளார். புகழ் உடன் இணைந்து விருஷா பாலு, ஜகதீஷ் குமார் ஆகியோர் பலரும் பாடியுள்ளனர். இந்தப் படத்திற்கு சுபாஷ் முனிரத்தினம் இசையமைத்துள்ளார். புகழ் நடிப்பில் உருவாகும் இந்தப் படத்தை சாஜோ சுந்தர் எம் இயக்குகிறார். புகழ் பாடிய பாடல்களுக்கு கலைகுமார் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் குறித்த விவரங்கள் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக தமிழ் சினிமாவில் பிரபலங்கள் பலரும் எத்தனையோ பாடல்கள் பாடியிருந்தாலும் அதெல்லாம் நடிகர், நடிகைகளுக்கு பல படங்களில் நடித்த பிறகு தான் சினிமாவில் பின்னணி பாடல்கள் பாடியிருக்கின்றனர்.