Keerthy Suresh: வழவழப்பான பச்சை நிற சேலையில்... கியூட் புன்னகையால் சுண்டி இழுக்கும் கீர்த்தி சுரேஷ்!
அழகு தேவதை போல்... பச்சை நிற சிம்பிள் சேலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா, சமந்தாவை அடுத்து, தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகர்கள் ஜோடி போட ஆசை படும் நடிகையாக உருவெடுத்துள்ளவர் கீர்த்தி சுரேஷ்.
அறிமுகமாகும் போது, தாளுக்கு மொழுக்கு என இருந்த இவர், பாலிவுட் வாய்ப்புகள் கூட தேடி வந்ததால், கடுமையான உடல் பயிற்சி மற்றும் டயட் இருந்து உடல் எடையை பாதியாக குறைத்து, தற்போது செம்ம ஸ்லிம்மாக மாறியுள்ளார். குறிப்பாக தற்போதைய இவரது உடல்கட்டுக்கு எந்த உடை அணிந்தாலும் சும்மா நச்சுனு பொருந்துகிறது.
சமூக வலைத்தளத்தில் செம்ம ஆக்ட்டிவாக இருப்பதில், அவ்வப்போது தன்னுனடய விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு, தன்னை பற்றிய தகவல்களையும் தெரிவித்து வருகிறார்.
சமீபத்தில் கூட தன்னுடைய செல்ல நாய் குட்டியை மடியில் வைத்து கொண்டு டம் டம் பாடலுக்கு இவர் நடனம் ஆடிய வீடியோ ஒன்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டது.
இதை தொடர்ந்து அம்மணி பச்சை நிற வழவழப்பான சிம்பிள் சேலையை.. சிங்கிள் பிலீட்டில் கட்டி மிதமான மேக்கப்பில் கியூட் சிரிப்பால் சுண்டி விழுந்துள்ளார். இதுகுறித்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.