MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கூலி முதல் போலீஸ் போலீஸ் வரை.. ஓடிடியில் மில்லியன் கணக்கில் வியூஸ் அள்ளிய டாப் 5 மூவீஸ் & வெப் சீரிஸ் இதோ

கூலி முதல் போலீஸ் போலீஸ் வரை.. ஓடிடியில் மில்லியன் கணக்கில் வியூஸ் அள்ளிய டாப் 5 மூவீஸ் & வெப் சீரிஸ் இதோ

ஓடிடி தளத்தில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டுள்ள நிலையில், அதில் என்னென்ன தமிழ் படங்கள் உள்ளது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 21 2025, 01:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Top 5 Most Watched Movies and Web Series
Image Credit : X

Top 5 Most Watched Movies and Web Series

ஓடிடி தளங்கள் சினிமா விரும்பிகளுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முன்பெல்லாம் உலக சினிமாவை பார்க்க விரும்புபவர்கள் அதற்கான சிடிக்களை தேடி அலைய வேண்டும். ஆனால் தற்போது கையடக்க செல்போனில் உலகின் எந்த மூலையில் எடுக்கப்பட்ட படமாக இருந்தாலும் அதை பார்க்கலாம். இதனால் ரசிகர்களின் ரசனையும் மாறி இருக்கிறது. அவர்களின் ரசனைக்கு ஏற்ப இந்திய படங்களும் உலகத் தரத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அக்டோபர் 13 முதல் 19-ம் தேதி வரை ஓடிடி தளங்களில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் மற்றும் வெப் தொடரின் பட்டியல் வெளியாகி உள்ளது.

24
டாப் 5 படங்கள்
Image Credit : instagram

டாப் 5 படங்கள்

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய படங்கள் பட்டியலில் மகாவதார் நரசிம்மா திரைப்படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 11 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வரும் பைனல் டெஸ்டினேசன் என்கிற ஹாலிவுட் திரைப்படம் 14 லட்சம் வியூஸ் உடன் 4ம் இடத்தில் உள்ளது. இதையடுத்து மூன்றாவது இடத்தை மிராய் என்கிற தெலுங்கு திரைப்படம் கைப்பற்றி இருக்கிறது. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 20 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.

Related Articles

Related image1
ஓஜி முதல் சக்தித் திருமகன் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டி நிற்கும் படங்கள் & வெப் தொடர் லிஸ்ட்
Related image2
சூப்பர் ஹிட்டான காந்தாரா 1 படத்தை ஓடிடிக்கு பார்செல் பண்ணியாச்சு! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?
34
அதிக வியூஸ் அள்ளிய கூலி
Image Credit : instagram

அதிக வியூஸ் அள்ளிய கூலி

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கூலி திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகி ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், அதற்கான மவுசு குறைந்தபாடில்லை. இப்படத்தை தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பினார்கள். இருந்த போதிலும் இப்படம் அமேசான் பிரைம் ஓடிடியில் 22 லட்சம் வியூஸ் அள்ளி இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் முதலிடத்தை பிடித்திருக்கிறது வார் 2 திரைப்படம். அயன் முகர்ஜி இயக்கிய இப்படத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தனர். நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வரும், இப்படம் 53 லட்சம் வியூஸ் அள்ளி முதலிடத்தில் உள்ளது.

44
டாப் 5 வெப் தொடர்கள்
Image Credit : Social Media

டாப் 5 வெப் தொடர்கள்

ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் பட்டியலில் தி கேம் என்கிற தமிழ் வெப் தொடர் 5-ம் இடத்தில் உள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவான இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸில் 10 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது. இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்திலும் தமிழ் வெப் தொடரான போலீஸ் போலீஸ் தான் உள்ளது. மிர்ச்சி செந்தில் நடித்த இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இதற்கு 13 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் குருக்‌ஷேத்ரா என்கிற வெப் தொடர் 22 லட்சம் வியூஸ் உடன் மூன்றாம் இடத்தில் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள சேர்ச் என்கிற வெப் தொடர் 24 லட்சம் வியூஸ் உடன் 2ம் இடத்தில் உள்ளது. முதலிடத்தை ஜம்னாபார் என்கிற வெப் தொடரின் இரண்டாவது சீசன் பிடித்துள்ளது. அமேசான் பிரைமில் உள்ள இந்த வெப் தொடர் 30 லட்சம் வியூஸ்களை அள்ளி இருக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதாரத்தோடு வந்து நின்ற கார்த்திக்! ஆடிப்போன சந்திரகலா.. சாமுண்டீஸ்வரி முகத்தில் சந்தோஷம்! கார்த்திகை தீபம் மெகா ட்விஸ்ட்!
Recommended image2
வயித்துல இருக்குற குழந்தையை நினைச்சு உருகும் ரோகிணி - கார்த்திகை தீபம் உருக்கமான கட்டம்!
Recommended image3
விஜய் முன்னே ரஷ்மிகாவிடம் ரக்ஷித் ஷெட்டி குறித்து கேள்வி – வைரலான ரியாக்ஷன் வீடியோ
Related Stories
Recommended image1
ஓஜி முதல் சக்தித் திருமகன் வரை... இந்த வாரம் ஓடிடி ரிலீசுக்காக வரிசைகட்டி நிற்கும் படங்கள் & வெப் தொடர் லிஸ்ட்
Recommended image2
சூப்பர் ஹிட்டான காந்தாரா 1 படத்தை ஓடிடிக்கு பார்செல் பண்ணியாச்சு! எப்போது ஓடிடி ரிலீஸ் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved