- Home
- Cinema
- Coolie :15 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகளை 5 நிமிடத்தில் தட்டி தூக்கிய அடங்காத டலாஸ் ரசிகர்கள்!
Coolie :15 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகளை 5 நிமிடத்தில் தட்டி தூக்கிய அடங்காத டலாஸ் ரசிகர்கள்!
கூலி திரைப்படத்தின், ப்ரீமியர் காட்சிக்கான 15 லட்சம் மதிப்புள்ள டிக்கெட்டுகளை வாங்கிவிட்டதாக அமெரிக்காவை சேர்ந்த டலாஸ் ரசிகர்கள் அறிவித்துள்ளனர்.

கூலி ஆகஸ்ட் 14 ரிலீஸ்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது அவரது ரசிகர்கள் ஆகஸ்ட் 14-ஆம் தேதி ரிலீசாக உள்ள, 'கூலி' படத்தை பார்க்க தயாராகி உள்ளனர்.
லோகேஷ் கனகராஜ், கூலி
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜுடன் முதல் முறையாக இணைத்திருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் சேர்ந்து நாகார்ஜுனா, உபேந்திரா, சௌபின் சாஹிர், ஸ்ருதிஹாசன், சத்யராஜ், போன்ற ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மோனிகா சாங் டிரெண்டிங்
அதேபோல் பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதுவரை போதை மருந்தை மையமாக வைத்து திரைப்படங்களை இயக்கி, ரசிகர்களின் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ்... இந்த முறை துறைமுகத்தில் நடக்கும் தங்கக் கடத்தலை மையமாக வைத்து 'கூலி' படத்தை இயக்கி முடித்துள்ளார். மேலும் அனிருத் இசையமைத்திருக்கும் இந்த படத்தை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரித்துள்ளது.
ரஜினிகாந்த் கூலி
இந்த படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான சிக்கிட்டு மற்றும் மோனிகா ஆகிய பாடல்கள் யூட்யூபில் ட்ரெண்டிங் ஆனது. அதேபோல் சமீபத்தில் வெளியான மூன்றாவது பாடலான பவர் ஹவுஸ் பாடலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் ப்ரோமோஷனில் தற்போது படக்குழு தீவிரமாக கவனம் செலுத்தி வரும் நிலையில், கூடிய விரைவில் 'கூலி' படத்தின் டிரைலரை மற்றும் இசையை எளிமையான முறையில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்களும் வெளியாகி வருகிறது.
கூலி ப்ரீ புக்கிங்
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், தற்போது வெளிநாடுகளில் 'கூலி' திரைப்படத்தின் பிரீ புக்கிங் துவங்கி இருக்குறது. அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள டாலர்ஸ் பகுதியில் வசித்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ரசிகர்கள் வெஸ்ட் பிளானோ சினிமா மார்க் என்கிற திரையரங்கில் ப்ரீமியர் காட்சிக்கான மூன்று ஸ்கிரீன்களின் ஒட்டு மொத டிக்கெட்களையும் 5 நிமிடத்தில் வாங்கி உள்ளனர். இதன் மதிப்பு மட்டும் 15 லட்சம் என அறிவித்துள்ளனர். இதுகுறித்த வீடியோவை அவர்கள் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.