- Home
- Cinema
- Vicky Kaushal-Katrina Kaif's wedding: திருமண ஜோடி மீது பரபரப்பு புகார்..! இது தான் காரணம்?
Vicky Kaushal-Katrina Kaif's wedding: திருமண ஜோடி மீது பரபரப்பு புகார்..! இது தான் காரணம்?
பாலிவுட் நடிகர் விக்கி கவுஷலுக்கும் (Vicky kaushal) , கத்ரீனா கைஃபுக்கும் (Katrina kaif) டிசம்பர் 9-ம் தேதி ராஜஸ்தானில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் சமீபத்திய தகவலின் படி, இந்த ஜோடிகளுக்கு எதிராக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த முழு விவரங்கள் இதோ...

விக்கி கௌஷல் மற்றும் கத்ரீனா கைஃப் ஜோடி டிசம்பர் 9 ஆம் தேதி ராஜஸ்தானில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர். இவர்களது மெஹந்தி, சங்கீத் மற்றும் பல்வேறு திருமண நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள், இன்று முதல் தொடங்குகிறது.
இந்த திருமண ஜோடிகள் மற்றும் இவர்களது பெற்றோர் உறவினர்கள் நேற்று மாலை திருமணம் நடைபெறும் இடத்திற்கு செல்ல புறப்பட்டனர். கத்ரீனா திருமண கலையோடு மஞ்சள் நிற ஷரராவில் அழகாகவும், விக்கி அவருக்கு ஏற்ற படு ட்ரெண்டியான உடையில் காணப்பட்டார்.
இப்படி பல்வேறு சந்தோஷங்களை அனுபவித்து கொண்டிருக்கும் ஜோடிகளுக்கு எதிராக ராஜஸ்தானில் புகார் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கத்ரீனா - விக்கி ஜோடிக்கு, ராஜஸ்தானின் உள்ள சவாய் மாதோபூர் மாவட்டத்தில் , உள்ள சிக்ஸ் சென்ஸ் ஃபோர்ட் பர்வாராவில் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இது சௌத் கா பர்வாரா என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த இடம் சௌத் மாதா மந்திர் மிகவும் பிரபலமானதும் கூட, கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷலின் திருமணம் காரணமாக மந்திருக்கு வரும் வழிகள் தடை செய்யப்பட்டுள்ளதாக, இவர்களுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் வழியை பக்தர்களுக்காக திறந்து வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ETimes வெளியிட்டுள்ள தகவலின் படி, சவாய் மாதோபூரின் மாவட்ட நிர்வாகம் ஒரு கூட்டத்தை நடத்தியது, அங்கு அவர்கள், இவர்களது பிரமாண்ட திருமணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதித்தனர். கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் நுட்பங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சவாய் மாதோபூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர கிஷன், திருமணம் தொடர்பான சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கவே கூட்டம் நடைபெற்றதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அவர்களிடம் போக்குவரத்து துறை, வனத்துறை, போக்குவரத்து துறை என பல்வேறு துறை அதிகாரிகள் இருந்தனர். மொத்தம் 120 விருந்தினர்கள் இருக்க வேண்டும், மேலும் அவர்கள் இரட்டை தடுப்பூசி சான்றிதழ்கள் மற்றும் RT-PCR சோதனைகளின் அடிப்படையில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.