போதை பொருள் குறும்படம் எடுத்தால்..லோகேஷ் உடன் பணிபுரியலாம்..காவல் ஆணையர்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்று இருந்ததால் இந்த இயக்குநரை முன்னிறுத்தி உள்ளது கோவை காவல்துறை.
கைதி, மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட படங்கள் மூலம் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். கோயம்புத்தூரை சேர்ந்த இவர் வங்கி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இருந்தும் தனது இயக்கத்தின் மீதுள்ள காதல் காரணமாக குறும்படம் ஒன்றை இயக்கி கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இடம் பெற்ற நிகழ்ச்சியில் காண்பித்துள்ளார்.
பின்னர் கார்த்திக் சுப்புராஜின் உந்துதலின் பேரில் லோகேஷ் கனகராஜ் படம் இயக்க துவங்கியுள்ளார். இவரது முதல் குறும்படம் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்த அவியல் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பிறகு மாநகரம் என்னும் படத்தை இயக்கினார். இதையடுத்து கைதி இவருக்கு மிகப்பெரிய வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.
மேலும் செய்திகளுக்கு...டான்ஸ் ஷோவை நான் நம்ப மாட்டேன்..அங்கெல்லாம் பணம் தான் பேசும் பிரபல தொலைக்காட்சி குறித்து சாய் பல்லவி
தொடர்ச்சியாக விஜய், விஜய் சேதுபதி நடித்த ஆக்ஷன் திரில்லரான மாஸ்டர் என்னும் படத்திற்கு இயக்கிய தென்னிந்திய சினிமா உலகை தன் பக்கம் திருப்பி பார்க்க வைத்தார். இந்தப் படம் இவருக்கு விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றுக் கொடுத்தது.
நேர்மையான விமர்சனங்களுடன் நல்ல வசூலையும் குவித்திருந்த மாஸ்டர் படத்தை அடுத்து உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்தை இயக்கினார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாஸில், சூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தனர்.
400 கோடிகளுக்கு மேல் வசூலை குவித்த இந்த படத்தை தொடர்ந்து கைது 2, விக்ரம் 2 உள்ளிட்ட படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். அதோடு தளபதி 67 படத்தையும் இயக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த படங்கள் வெற்றி கண்டதனால் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனராக மாறிவிட்டார் லோகேஷ் கனகராஜ்.
இந்நிலையில் இவரை முன்னிறுத்தி போதைப்பொருள் தடுப்பு குறித்தான விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்துள்ளது கோவை மாநகராட்சி காவல்துறை. அதன்படி காவல் ஆணையர் ஒரு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்.
அதாவது போதைப் பொருள் தடுக்கும் விதமாக எடுக்கப்படும் குறும்படத்தில் சிறந்ததை தேர்ந்தெடுத்து அதை இயக்கியவருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் உதவி இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படும் என கோவை காவல் ஆணையர் அறிவித்துள்ளார்.
Lokesh Kanagaraj
தமிழக மாவட்டங்களில் போதைப்பொருட்களால் இளைஞர்கள் சீரழிவது தொடர்கதையாக இருந்து வரும் நிலையில் தற்போது காவல்துறை புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளது வாழ்த்துக்களை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய கைதி, மாஸ்டர், விக்ரம் என தொடர்ந்து போதைப் பொருளுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்று இருந்ததால் இந்த இயக்குநரை முன்னிறுத்தி உள்ளது கோவை காவல்துறை.