பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கிய சித்ராவின் கணவர் ஹேம்நாத்..! பகீர் தகவலை வெளியிட்ட நண்பர்..!
சித்ரா தற்கொலை விவகாரத்தில், ஹேம்நாத் தண்டிக்க படவேண்டும் என பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ள ஹேம்நாத்தின் நண்பர், ஏற்கனவே ஹேம்நாத் மீது பாலியல் பலாத்கார வழக்கு உள்ளதாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' சீரியலில் முல்லையாக நடித்து வந்த விஜே சித்ரா கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி, சென்னை நசரத்பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் தற்போது வரை பல மர்மங்கள் நீடித்து வருகிறது.
இது தற்கொலை அல்ல, கொலை தான் என சித்ராவின் பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஆணித்தனமாக கூறிய போதிலும், சித்ரா தற்கொலை செய்து கொண்டதாகவே மருத்துவ பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
எனினும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய கணவர் ஹேமந்தை போலீசார் கைது செய்தனர். அந்த வழக்கு தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், ஹேமந்த் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து நேற்று நசரத்பேட்டை போலீசார் தாக்கல் செய்த அறிக்கையில் சித்ராவின் கணவர் ஹேமந்தின் சந்தேகமே அவருடைய தற்கொலைக்கு காரணம் என திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சமீபத்தில் ஹேமந்துடன் பேசிய ஆடியோவை வெளியிட்ட அவருடைய நண்பர் செய்யது ரோகித் பகீர் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவர் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு கொடுத்த பேட்டியில், இதுவரை ஹேமந்த் பற்றி வெளிவராத பகீர் தகவலை கூறியுள்ளார்.
ஹேம்நாத் பல பெண்களுடன் பழகியுள்ளார். இதை நான் பார்த்துள்ளேன். ஆனால் இதுகுறித்து வெளியே சொல்ல முடியாத நிலையில் அவர்கள் உள்ளனர்.
தி.நகரில் ஹேம்நாத் மீது பாலியல் வழக்கு ஒன்று உள்ளது. இது குறித்து பலருக்கும் தெரியாது. இதை அவரது அப்பா தான் பார்த்துக்கொண்டார். எனவே பணம் கொடுத்து இந்த வழக்கு மூடிவிட்டார்களா என தெரியவில்லை என இந்த பேட்டியில் ஹேம்நாத்தில் நண்பர் கூறியுள்ளார்.
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இவரிடம் போலீசார் விரைந்து விசாரணை விசாரணை மேற்கொண்டு, சித்ரா குறித்த பல மர்மங்களை வெளிக்கொணர வேண்டும் என்பது சித்ரா ரசிகர்களின் ஆவலாக உள்ளது.