MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்கூல் படிக்கும்போதே திருமணம்... 2 முறை விவாகரத்து - ‘மாவீரன்’ நடிகை சரிதாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா?

ஸ்கூல் படிக்கும்போதே திருமணம்... 2 முறை விவாகரத்து - ‘மாவீரன்’ நடிகை சரிதாவின் வாழ்க்கையில் இவ்வளவு சோகங்களா?

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் அம்மா கேரக்டரில் நடித்துள்ள நடிகை சரிதாவின் சோகங்கள் நிறைந்த வாழ்க்கையை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
| Updated : Jul 17 2023, 10:26 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

1980-களில் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்தவர் தான் சரிதா. இவரது நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. குறுகிய காலத்திலேயே சினிமாவில் இருந்து விலகிய சரிதா, தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். சினிமாவில் சக்சஸ்புல் நாயகியாக வலம் வந்த சரிதாவின் சொந்த வாழ்க்கை பல்வேறு சோகங்களும், மர்மங்களும் நிறைந்ததாக உள்ளது. அதைப்பற்றி பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றி கூறி இருக்கிறார்.

26

1960-ல் குண்டூர் அருகே ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்தவர் தான் சரிதா. இவர் பள்ளிப்படிப்பை முடிக்கும் முன்னரே இவருக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்தது. இவர் முதல் படமே கமல்ஹாசனுடன் அதுவும் கே.பாலசந்தர் இயக்கத்தில் தான் ஹீரோயினாக அறிமுகமானார் சரிதா. அப்போது அவருக்கு வயது 15. சரிதா நடித்த முதல் படமான மரோ சரித்ரா 1978-ம் ஆண்டு ரிலீசாகி ஹிட் அடித்தது. பின்னர் அதே ஆண்டில் தமிழிலும் ரஜினியின் தப்பு தாளங்கள் படம் மூலம் எண்ட்ரி கொடுத்த சரிதா, தன்னுடைய நடிப்பு திறமையால் பாராட்டுக்களை அள்ளினார்.

36

இப்படி இரண்டு படங்கள் ஹிட் கொடுத்ததும் நடிகை சரிதாவுக்கு 16 வயதிலேயே திருமணம் நடக்கிறது. அவர் வெங்கட சுப்பையா என்கிற தெலுங்கு நடிகரை திருமணம் செய்துகொண்டார். அறியாத வயதில் நடந்த அந்த திருமணம் ஆறு மாதத்திலேயே முடிவுக்கு வருகிறது. திருமணத்துக்கு பின் நடிக்கக் கூடாது என கண்டிஷன் போட்டதால் பிரச்சனை ஏற்பட்டு அவரை பிரிந்துவிட்டார் சரிதா.

இதையும் படியுங்கள்... தலைவலியாக மாறிய தலைப்பு... ரஜினியின் ஜெயிலர் படத்துக்கு கடைசி நேரத்தில் வந்த சிக்கல் - டைட்டில் மாற்றமா?

46

பின்னர் சினிமாவில் முழு கவனத்தை செலுத்திய சரிதா, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் நடித்து டாப் ஹீரோயினாக கொடிகட்டிப் பறந்தார். பாலசந்தரையே வியக்க வைத்த நடிகை தான சரிதா. குறிப்பாக அவர் இயக்கிய தண்ணீர் தண்ணீர் என்கிற படத்தில் தலையிலும், இடுப்பிலும் குடத்தை வைத்துக் கொண்டு மற்றொரு கையில் குழந்தையுடன் வரும்படி ஒரு காட்சி இருந்ததாம். இந்த சீனை எப்படி எடுப்பது என பாலச்சந்தரே குழம்பிப் போய் இருந்த வேளையில், சரிதா அசால்டாகா ந்த சீனை நடித்து பாலசந்தருக்கே ஷாக் கொடுத்தாராம். இதைப் பார்த்து செட்டில் இருந்த அனைவரும் ஆச்சர்யத்தில் திளைத்துப் போனார்களாம்.

56

இப்படி சரிதாவின் நடிப்புத் திறமையை பார்த்து டாப் ஹீரோக்களே பயந்துபோன காலமாக அது இருந்துள்ளது. சரிதாவின் வளர்ச்சி பிடிக்காத சிலர் அவரது காட்சிகளை டம்மி செய்யுமாறு சொல்வார்களாம். அந்த அளவுக்கு நடிப்பு ராட்சசியாக இருந்திருக்கிறார் சரிதா. இவர் ஒரு கட்டத்தில் மலையாள நடிகர் முகேஷுடன் தொடர்ந்து சில படங்களில் பணியாற்றி வந்துள்ளார். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு கடந்த 1988-ம் ஆண்டு முகேஷை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் சரிதா.

66

முகேஷை திருமணம் செய்துகொண்ட பின்னர் சினிமாவில் இருந்து விலகிய சரிதா, பின்னர் விஜய்யின் பிரெண்ட்ஸ் உள்பட சில படங்களில் மட்டும் அவ்வப்போது தலைகாட்டி வந்தார். இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு முகேஷ் உடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார் சரிதா. அதன்பின்னர் சினிமா பக்கம் தலைகாட்டாமலே இருந்து வந்த அவர், தற்போது மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடித்து தரமான கம்பேக் கொடுத்துள்ளார். இனி அவர் அம்மா ரோல்களை ஆக்கிரமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இதையும் படியுங்கள்... ஒரே ஒரு மாஸ் ஹீரோ.. அவருக்கு காதலியாக, அக்காவாக, மாமியாராக, அம்மாவாக நடித்த பிரபல நடிகை!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் டூ நேஷனல் அவார்டு வின்னர்! அஜித்திற்கும் பிரபுதேவாவிற்கும் குரல் கொடுத்த விக்ரம் - திரைக்குப் பின்னால் இருந்த 10 ஆண்டு போராட்டம்!
Recommended image2
வாழ்க்கையா? பணமா? காதல் கோட்டை படத்திற்காக அஜித் செய்த அந்தப் பெரிய தியாகம்.. இன்று வரை யாருக்கும் தெரியாத உண்மை!
Recommended image3
டான் 3 சர்ச்சை: ரன்வீர் சிங் 40 கோடி கொடுப்பாரா? அல்லது ஃபர்ஹான் அக்தர் கோர்ட்டுக்கு செல்வாரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved