MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Box office hits : இந்த வருட ஹிட் அடித்த ஹீரோஸ்... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது யார் தெரியுமா?

Box office hits : இந்த வருட ஹிட் அடித்த ஹீரோஸ்... பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டியது யார் தெரியுமா?

இந்த வருடத்தில் வெளியான படங்கள் பாக்ஸ் ஆபிஸில் குவித்த வசூல் வேட்டை குறித்து இங்கு பார்ப்போம்...

3 Min read
Kanmani P
Published : Dec 23 2021, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
114
master

master

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய படம் மாஸ்டர் . இந்த படம் கடந்த ஜனவரி 13-ம் தேதி பொங்கல் விருந்தாக வெளியாகியுள்ளது.  ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமா இதை சேவியர் பிரிட்டோ தனது முதல் தயாரிப்பு நிறுவனமான XB ஃபிலிம் கிரியேட்டர்ஸின் கீழ் தயாரித்தார். 

214
master

master

இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ளனர், மாளவிகா மோகனன் , சாந்தனு பாக்யராஜ் , ஆண்ட்ரியா ஜெர்மியா , அர்ஜுன் தாஸ் மற்றும் கௌரி ஜி. கிஷன் ஆகியோரம்  நடித்துள்ளனர் . இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் முதல் இடத்தை பிடித்துள்ளது.

314
annaththa movie image

annaththa movie image

இரண்டாம் இடத்தை ரஜினியின் அண்ணாத்த படம் பிடித்துள்ளது. சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரஜினி -கீர்த்தி சுரேஷ் இருவரும் அண்ணன் தங்கையாக நடித்திருந்தனர்.

414
annaatthe

annaatthe

மீனா, குஷ்பு, நயன்தாரா என நாயகிகள் வரிசை கட்டிய இந்த படம் குறித்து கலவையான கமெண்ட்ஸ் வெளியானது. இருந்தும் ரூ. 240 கோடி வசூலை பெற்று அண்ணாத்தா மாஸ் காட்டியது.

514
doctor

doctor

மூன்றாவது இடத்தை சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் பிடித்திட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு டாக்டர் படம் கைகொடுத்து தூக்கிவிட்டது. நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான டாக்டர் படம் சிவகார்த்திகேயனை வேறொரு பரிமாணத்தில் காட்டியது மட்டுமில்லாமல் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது.

614
doctor

doctor

அனிருத் இசையமைத்துள்ள இந்தப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சனில் 100 கோடியை பெற்று மாஸ் காட்டியது.

714
maanaadu

maanaadu

சிம்புவின் மாநாடு 4-ம் இடத்தை பிடித்துள்ளது. சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான படம் 'மாநாடு'. கடந்த மாதம் வெளியான இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. 

814
maanaadu

maanaadu

'மாநாடு' படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி நடித்துள்ளார். இவர்களுடன் எஸ்ஏ சந்திரசேகர், பாரதிராஜா, எஸ்.ஜே.சூர்யா, பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா மற்றும் கருணாகரன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களே இந்தப்படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியை வசூலாக அள்ளியது.

914
Karnan

Karnan

தனுஷின் 41வது படம் கர்ணன். மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தாணு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. 

1014
Karnan

Karnan

கர்ணன் படத்தில் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த படம் அப்போது ரூ. 63 கோடியை பெற்றுள்ளது.
 

1114
Aranmanai 3

Aranmanai 3

அரண்மனை 3 பாக்ஸ் ஆபிஸில் 6 -ம் இடத்தில் உள்ளது. இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி, பெரும் வெற்றி பெற்ற அரண்மனை, அரண்மனை 2 படங்களை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கியுள்ளார்.

1214
Aranmanai 3

Aranmanai 3

இதில், நடிகர் ஆர்யா கதாநாயகனாகவும், ராஷி கண்ணா கதாநாயகியாகவும் நடித்துள்ளார், மேலும் ஆண்ட்ரியா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளர். இவர்களை தவிர முக்கிய வேடத்தில், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், விவேக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த அக்டோபர் 14-ம் தேதி  இந்த படம் திரையிடப்பட்டது. கலவையான விமரிசனங்களை பெற்றாலும் இந்த படம் ரூ. 50 கோடியை வசூலித்திருந்தது.
 

1314
sultan

sultan

7வது இடத்தில் உள்ள சுல்தான் எட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் பேனரின் கீழ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. பாக்கியராஜ் கண்ணன் எழுதி இயக்கிய இந்த படம் ஏப்ரல் 2-ம் தேதி  தமிழ் மொழி அதிரடி  திரைப்படமாக வெளியானது..

1414
sultan

sultan

இப்படத்தில் கார்த்தி மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளனர் , இது தமிழ் சினிமாவில் அறிமுகமாகும். நெப்போலியன் , லால் , யோகி பாபு , ராமச்சந்திர ராஜு மற்றும் நவாப் ஷா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். சுல்தான் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ரூ.35 கோடியை பெற்றிருந்தது.

About the Author

KP
Kanmani P
டாக்டர்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved