- Home
- Cinema
- யம்மாடியோவ்.. Money டாஸ்கில் ரூ.12 லட்சம் - பணப் பெட்டியோடு பிக்பாஸ் வீட்டுக்கு குட் பை சொன்னது யார் தெரியுமா?
யம்மாடியோவ்.. Money டாஸ்கில் ரூ.12 லட்சம் - பணப் பெட்டியோடு பிக்பாஸ் வீட்டுக்கு குட் பை சொன்னது யார் தெரியுமா?
வழக்கமாக பிக்பாஸ் (Biggboss) நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அனுப்பப்படும், அதில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்பவர்கள் அந்த தொகையுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது.
இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் நடந்து வருகிறது. இந்த சீசன் இன்னும் ஓரிரு வாரத்தில் முடியப்போகிறது. தற்போது ராஜு, பிரியங்கா, நிரூப், தாமரைச்செல்வி, பாவனி, அமீர், சிபி ஆகியோர் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னர் ஆகப்போகிறார். அவர் யார் என்பது இறுதி வாரத்தில் தெரியவரும்.
இதில் அமீர் கடந்த வாரம் நடந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்கில் வெற்றி பெற்றதன் மூலம் நேரடியாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். மீதமுள்ள ராஜு, பிரியங்கா, தாமரை, சிபி, நிரூப், பாவனி ஆகிய ஆறு பேரில் இறுதிப்போட்டிக்குள் நுழையப்போவது யார் என்கிற எதிர்பார்ப்பு உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் பரிசை வெல்பவருக்கு 50 லட்ச ரூபாய் வழங்கப்படும். மற்ற போட்டியாளர்களுக்கு எந்தவித பரிசும் கிடைக்காது. ஆனால் வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி 90 நாட்களை கடந்த பின்னர் போட்டியாளர்களுக்கு ஒரு பணப்பெட்டி அனுப்பப்படும், அதில் இருக்கும் தொகையை எடுத்துக்கொள்பவர்கள் அந்த தொகையுடன் உடனடியாக வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.
இதுவரை நடந்த 4 சீசன்களில் கவின் மற்றும் கேப்ரியல்லா ஆகியோர் மட்டுமே இவ்வாறு வெளியேறி உள்ளனர். தற்போது நடைபெற்று வரும் 5-வது சீசனில் இந்த வாரம் அந்த பணப்பெட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. நடிகர் சரத்குமார் பெட்டியுடன் வந்து இந்த டாஸ்க்கை தொடங்கி வைத்தார்.
முதலில் ரூ.3 லட்சத்தில் தொடங்கிய இந்த டாஸ்க் நேற்று எபிசோடு முடியும்போது ரூ.9 லட்சமாக அதிகரிக்கப்பட்டது. அதுவரை யாரும் இந்த தொகையை எடுத்துக்கொள்ளவில்லை. தற்போது வெளியாகி உள்ள தகவல் படி சிபி பணப்பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அவர் ரூ.12 லட்சம் பணத்துடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் கேபி மற்றும் கவின் ஆகியோர் ரூ.5 லட்சம் எடுத்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், தற்போது சிபி அதனை முறியடித்து, அதிக பணத்துடன் வெளியேறி உள்ளார். இன்றைய எபிசோடில் இது தெரியவரும்.