இந்திய அளவியில் ட்ரெண்டான பிக்பாஸ் ஷிவானி... இது தான் காரணமா? அட வேற லெவல் போங்க..!!
விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிளுகிளுப்பு மூட்டி வந்த பிக்பாஸ் ஷிவானி, திடீர் என இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகியுள்ளார். இதற்கான காரணம் கேட்டால் கண்டிப்பாக நீங்களும் அவரை வாழ்தல் இருக்க மாட்டீர்கள்...
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, வாணி போஜன், பிரியா பவானி ஷங்கர் போன்ற நாயகிகள் வெற்றிப்படங்களை கொடுத்து தற்போது பிஸியான ஹீரோயினாக மாறியுள்ளனர். இவர்களை தொடர்ந்து சின்னத்திரையில் இருந்து அடுத்தடுத்து சில ஹீரோயின்கள் வந்து கொண்டே இருக்கும் நிலையில், பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஷிவானி.
தன்னுடைய 17 வயதிலேயே... சின்னத்திரை சீரியலில் வெற்றிகரமான ஹீரோயினாக வலம் வந்த இவர், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதால் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களையும் கவனிக்க வைத்தார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பின்னர் தீவிரமாக திரைப்படங்களில் நடிக்க முயற்சி எடுத்து வரும் இவர், பல்வேறு யோகாசனம் மற்றும் உடற்பயிற்சிகள் செய்து தன்னுடைய உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார்.
முன்பை போல் ஓவர் கவர்ச்சி காட்டாமல்... மிதமான கவர்ச்சியில் ரசிகர்கள் மனதை கொள்ளை அடிப்பது போல் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதன் காரணமாக, பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னர் ஷிவானிக்கான ரசிகர்கள் கூட்டம் ஏக்க சக்கமாக கூடிவிட்டது. இவருக்கான இன்ஸ்டாகிராம் ஃபாலோவர்ஸும் அதிகரித்தனர்.
shivani
shivani