அனிதாவின் பேச்சுக்கு செய்ய வேண்டிய செயலை ஒரு கையால் செய்ய முடியாது..! ஆவேசமான கமல்..!
பிக்பாஸ் வீட்டில் நடந்த, நவராத்திரி பூஜையின் போது, சுரேஷ் சக்கரவர்த்தி சுமங்கலிகள் வந்து விளக்கு ஏற்றுங்கள் என கூறினார். இதை வைத்து கொண்டு கணவன் மார்களை இழந்தவர்களை இந்த சமூகம் எப்படி பார்க்கிறது என, சுரேஷை சொன்ன வார்த்தையை வைத்து தன் மனதில் தோன்றியவற்றை பேசினார் அனிதா.
அதே நேரத்தில், இந்த தருணத்தில் இது பேசவேண்டிய வார்த்தை இல்லை என்பதை சுரேஷ் கூறி தன்னுடைய கருத்தை முன்வைத்தார்.
அனிதா மன்னிப்பு கேட்க சென்றபோது தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டாம் என கூறி அந்த இடத்தில் இருந்து விட்டால் போதும் என ஓடிவிட்டார்.
இவரது செயல் அனிதாவை மிகவும் பாதித்தது. பலரும் அனிதாவிற்கு சப்போர்ட் செய்யாமல் சுரேஷ் தரப்பிற்கு ஆதரவு கொடுப்பது போல் அவர் உணர்ந்ததால், பாத்ரூமில் குலுங்கி குலுங்கி அழுதார்.
சோகமாகவே இருந்த அனிதாவை பிக்பாஸ் தேற்றினார் என்பதையும் நாம் பார்த்தோம்.
இந்த விவகாரம் இன்று சபைக்கு வருகிறது. இந்த சுமங்கலிகள் விஷயத்தில், அனிதாவின் பேச்சு பற்றி அர்ச்சனா, ஷிவானி உள்ளிட்ட சிலரிடம் தன்னுடைய கருத்தை கேட்டார் கமல்.
இதற்க்கு, பலர் சுரேஷின் கருத்தை ஆதரித்தே பேசினர். அனிதாவும் தான் கூறிய கருத்தில் மிகவும் தெளிவாக இருந்தார்.
இதை தொடர்ந்து பேசும் கமல், அனிதாவின் பேச்சுக்கு செய்ய வேண்டிய செயலை ஒரு கையால் செய்திட முடியாது என, கை தட்டி பாராட்டியதுடன், பின்னர் எப்போது இதை பற்றி பேசப்போகிறோம் என ஆவேசமாக பேசும் காட்சிகள் தற்போதைய புரோமோவில் இடம்பெற்றுள்ளது.