இனி அதிரடி... சரவெடி தான்! பிக்பாஸ் வீட்டின் உள்ளே நுழைந்துள்ள மொத்த போட்டியாளர்கள் லிஸ்ட் மற்றும் புகைப்படம்!
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று துவங்கிய நிலையில் மொத்தம் 20 போட்டியாளர்கள் வீட்டின் உள்ளே சென்றுள்ளனர். அவர்கள் யார் யார்... என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் வீட்டில் பொதுமக்கள் தேர்வாக உள்ளே சென்றுள்ளவர் தான் இந்த தனலட்சுமி. இவர் டிக் டாக் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் ஆவார்.
நிவா சிங்கப்பூரை சேர்ந்த இவர், ஒரு ஆடை வடிவமைப்பாளர், மற்றும் மாடலிங் துறையை சேர்ந்தவர். நடிகராக வேண்டும் என பலர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைக்கும் நிலையில் இவரும் நடிகையாகும் கனவுடன் இதில் கலந்து கொண்டுள்ளார்.
குயின்சி, ஒரு சீரியல் நடிகை. சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'அன்பே வா' என்கிற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் இருந்து விலகி வெள்ளித்திரை வாய்ப்பை கைப்பற்றும் முயற்சியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார்.
தொகுப்பாளரான விஜே கதிரவன்... சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கினாலும் வெளி திரையில் ஒரு ரவுண்ட் வர ஆசை பட்டு தான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
தொகுப்பாளினியும் , நடிகையுமான மகேஸ்வரிக்கு அறிமுகமே தேவை இல்லை. காரணம் இவர் அந்த அளவிற்கு மிகவும் பிரபலமானவர். சமீபத்தில் கூட கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் விஜய் சேதுபதியின் 3 மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக பிரபலமான அமுதவாணன், சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும்... தமிழ் திரையுலகில் நிலையான இடத்தை பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியுடன் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
இவர் யாரும் எதிர்பாராத ஒரு போட்டியாளர் என கூறலாம்... பத்திரிகையாளர் என்கிற அடையாளத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள இவர், எந்த அளவிற்கு போட்டியாளர்களை கணித்து விளையாடுவார் என்பதை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாகவே உள்ளனர்.
நடன இயக்குனரும், சீரியல் நடிகையுமான ஷாந்தி... தற்போது சின்னத்திரையில் பிஸியான நடிகையாக நடித்து வந்தாலும், அதனை விட்டு விட்டு தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
லாஸ்லியாவை தொடர்ந்து இலங்கையில் இருந்து வந்து, வந்த வேகத்தில் ரசிகர்கள் மனதில் அதிக இடம் பிடித்து விட்டார் ஜனனி. இவருக்கு இப்போது ஆர்மி துவங்கி பல ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகிறார்கள். இதை கடைசி வரை தக்க வைத்து கொள்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
ராப் பாடகரும், இண்டிபெண்டெண்ட் சிங்கருமான ADK... முகேன் ராவ் போல்... ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து, வெற்றிவாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்திய கிரிக்கெட் டீமில் இருந்து ஒருவர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார் என்றால் கேட்பதற்கே சற்று ஆச்சர்யமாக தான் இருக்கிறது இல்லையா? ஆம் கிரிக்கெட்டர் மற்றும் மாடலிங் துறையை சேர்ந்த ராம் ராமசாமி பிக்பாஸ் ரசிகர்கள் மனதில் சிக்ஸ் அடித்து வெல்வாரா? பார்க்கலாம்
விஜய் டிவியின் செல்ல பிள்ளை என்று சொல்லும் அளவிற்கு பல சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்துள்ளவர் ரஷிதா மஹாலக்ஷ்மி. சீரியல் நடிகை என்பதை தாண்டி, திரைப்படங்களில் நடித்திருந்தாலும், நிலையான இடத்தை இவரால் பிடிக்கமுடியவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வெள்ளித்திரையில் நிரந்தர இடத்தை பிடிப்பாரா என்பதே ரசிகர்களின் ஆவலாகவும் உள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரும், சின்னத்திரை நடிகருமான மணிகண்டன், பலரும் சீரியல் பெயரை வைத்து மட்டுமே இதுவரை அழைத்து வருவதாகவும் அந்த ஐடென்டிட்டியை மாற்றுவதற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிரபல மாடலான ஷிரினா... தன்னுடைய திறமை உலகறிய வேண்டும் என்பதற்காகவும், சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற கனவிற்காகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடியெடுத்து வைத்துள்ளார்.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் சத்யா என்கிற சீரியலில் நடித்து வந்த ஆயிஷா... திடீர் என பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடியதில் தற்போது வரை மறக்க முடியாத சில பிரபலங்கள் உள்ளனர். அப்படி ஒருவர் தான் வனிதா விஜயகுமார். அவரின் முன்னாள் காதலரும் நடன இயக்குனருமான ராபர்ட் மாஸ்டர் இதில் காலத்து கொண்டுள்ளதால் நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியுள்ளது.
சின்னத்திரை சீரியல் நடிகரான அசீம், கடந்த பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியிலேயே கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை கலந்து கொண்டுள்ளார்.
டிரான்ஸ் மாடலும், நடிகையுமான சிவன் கணேசன் தன்னுடைய திறமையை இந்த நிகழ்ச்சி மூலமாக வெளிக்காட்டுவது மட்டும் இன்றி, தன்னை போன்ற திருநங்கைகள் துணிந்து வெளியே வந்து சாதிக்க வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.
பாப் பாடகரான அசல்... மிகவும் இளம் வயதிலேயே தன்னுடைய திறமையால் மிகவும் பிரபலமானவர். ரசிகர்கள் மனதிலும் இடம்பிடித்து வெற்றி வாகை சூடுவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாதா மனிதராக வலம் வந்து கொண்டிருப்பவர். இந்த நிகழ்ச்சி மூலம் தனக்கான நெகடிவ் விமர்சனங்களை களைந்து பாசிட்டிவ் விமர்சனத்தோடு, ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பாரா என்பதை சில தினங்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.