BiggBoss Raju : பிக்பாஸ் ஜெயிச்சதும்... அஜித்தை பார்க்க ஆவலோடு இருந்தேன்!! ஏமாற்றமே மிஞ்சியது - ராஜூ அப்செட்
கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, பீஸ்ட் பட இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 5 சீசன்கள் முடிவடைந்துள்ளது. இந்த 5 சீசன்களையும் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார்.
கடைசியாக நடந்து முடிந்த 5-வது சீசனில் ராஜு ஜெயமோகன் டைட்டில் வின்னர் ஆனார். அவருக்கு பிக்பாஸ் டிராபியும், ரூ.50 லட்சம் பணமும் பரிசாக வழங்கப்பட்டது. பிரியங்கா இரண்டாம் இடம் பிடித்தார். டைட்டில் ஜெயித்த ராஜுவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
கனா காணும் காலங்கள் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ராஜு, இயக்குனர் நெல்சனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். இதுதவிர விஜய் டிவி நிகழ்ச்சிகள் சிலவற்றுக்கு ஸ்கிரிப்ட் ரைட்டராகவும் பாணியாற்றி உள்ளார் ராஜு. கடைசியாக இவர் ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடித்து வந்தார்.
அந்த சமயத்தில் தான் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் அவரது வாழ்க்கையே மாறிவிட்டது. மக்களின் மனங்களை வென்ற போட்டியாளராக இருந்ததோடு மட்டுமின்றி டைட்டில் வென்றும் அசத்தினார்.
இந்நிலையில், பிக்பாஸுக்கு பின் ராஜு அளித்த பேட்டி ஒன்றில், பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும், அஜித்தின் வலிமை படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலோடு வந்தேன். ஆனால் படம் ரிலீஸ் ஆகவில்லை என்பது தெரிந்து ஏமாற்றம் அடைந்தததாக தெரிவித்துள்ளார்.