- Home
- Cinema
- BiggBoss Namita Marimuthu: பிக்பாஸ் நமீதா மாரிமுத்துவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்..!
BiggBoss Namita Marimuthu: பிக்பாஸ் நமீதா மாரிமுத்துவுக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரலாகும் புகைப்படம்..!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் (Biggboss tamil 5) கலந்து கொண்டு, வந்த வேகத்தில் தன்னுடைய உடல்நிலை காரணமாக வெளியேறிய நமீதா மாரிமுத்துவின் (Namitha marimuthu) வளர்ப்பு மகளின் புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வருடன் பிக்பாஸ் போட்டியாளர்களின் தேர்வு எதிர்பார்த்ததை விட மிகவும் வித்தியாசமாகவே இருந்தது. குறிப்பாக, இதில்... திருநங்கை போட்டியாளராக நமீதா மாரிமுத்து கலந்து கொண்டார்.
ஆரம்பம் முதலே மிகவும் திறமையாக விளையாடிய இவர், கண்டிப்பாக இறுதி போட்டி வரை வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் வாரத்திலேயே உடல்நல பிரச்சனை காரணமாக வெளியேறினார்.
இவர் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேற காரணம் தாமரையுடன் ஏற்பட்ட காரணம் தான் என கூறப்பட்ட நிலையில், அப்படி எதுவும் இல்லை என்றும் ரசிகர்களுடன் பேசியபோது விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் தற்போது, பிக்பாஸ் நமீதா ஒரு பெண்ணை தத்து எடுத்து வளர்த்து வருகிறார் என்றும் அவர் தன்னுடைய வளர்ப்பு மகளுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களும், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிரது.
தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு போராட்டங்களையும், வலிகளையும் கடந்து வந்த நமீதா மாரிமுத்து, தன்னை போல் இருப்பவர்களை தத்தெடுத்து அவர்களுக்கு வாழ்க்கையை உருவாக்கி தரவேண்டும் என்பதே தன்னுடைய லட்சம் என பிக்பாஸ் வீட்டிலே கூறி இருந்தார்.
இதனை நிறைவேற்றும் விதமாகவே தற்போது ஒருவரை தன்னுடைய மகளாக நமீதா மாரிமுத்து தத்தெடுத்து வளர்த்து வருவதாக கூறப்படுகிறது. இதற்க்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.