பாப் கட்டிங்..திருமண கவுன்..கடற்கரையில் கலக்கும் பிக்பாஸ் லாஸ்லியா...எவ்ளோ பெரிய ரோஸு..
திருமண ஒயிட் கவுனில் பிக்பாஸ் லாஸ்லியா கொடுத்துள்ள நேர்த்தியான போஸ் செம வைரலாகி வருகிறது.. ஆனால் அவர் பிடித்திருக்கும் றோஸ் தான் மிகப்பெரியதாக உள்ளது..
BiggBoss Losliya
இலங்கை செய்திவாசிப்பாளரான லாஸ்லியாவை உலகமறிய செய்தது என்றால் அது பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு தான் முதல் முதலில் ஆர்மி துவங்கி பட்டி தொட்டியெல்லாம் இவரை பிரபலமடைய செய்தனர் இவரது ரசிகர்கள்.
BiggBoss Losliya
ஆரம்பத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போட்டியாளராக இருந்த இவரை, தடுமாற வைத்தது காதல் விவகாரம். அதே நேரம்... பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இவரது குடும்பத்தினர் தாறுமாறாக இவரை திட்டியதும் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியது.
BiggBoss Losliya
பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது, தெய்வீகமாக காதல் போல் கவினும் - லாஸ்லியாவும் சீன் போட்டது அனைவரும் அறிந்ததே... அதே நேரம் பிக்பாஸ் வீட்டை விட்டு கவின் வெளியேறிய பின்பு இவர்கள் காதல் காற்றில் கரைந்த கற்பூரமாய் காணாமல் போனது.
BiggBoss Losliya
இதை தொடர்ந்து தற்போது இருவருமே அவரவர் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் லாஸ்லியா நடிப்பில் சமீபத்தில் ஃபிரென்ட்ஷிப் திரைப்படம் வெளியானது.
BiggBoss Losliya
இதை தொடர்ந்து இவர், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பில், பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'கூகுள் குட்டப்பன்' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
BiggBoss Losliya
தொடர்ந்து சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் லாஸ்லியா... தற்போது, கியூட் உடையில்... வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
BiggBoss Losliya
திருமண ஒயிட் கவுனில் பிக்பாஸ் லாஸ்லியா கொடுத்துள்ள நேர்த்தியான போஸ் செம வைரலாகி வருகிறது.. ஆனால் அவர் பிடித்திருக்கும் றோஸ் தான் மிகப்பெரியதாக உள்ளது..
BiggBoss Losliya
கியூட்டாக லெஸ்லியாக கொடுத்துள்ள இந்த போட்டோக்கள் லைக்குகளை அள்ளி வருவதோடு..ரசிகர்களின் வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது..