MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss Tamil : பிக்பாஸ் தாமரைச் செல்வியின் சம்பள விவரம் லீக்கானது... 98 நாட்களுக்கு இத்தனை லட்சமா?

Bigg Boss Tamil : பிக்பாஸ் தாமரைச் செல்வியின் சம்பள விவரம் லீக்கானது... 98 நாட்களுக்கு இத்தனை லட்சமா?

பிக்பாஸ் நிகச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி உள்ளது. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 3-ல் தாமரை போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். 

1 Min read
Author : Ganesh A | Asianet News
Published : Jan 13 2022, 08:55 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

உலகளவில் பிரபலமான ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் அறிமுகமானது. விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சமில்லாத இந்நிகழ்ச்சி அந்த ஆண்டே ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சியாக மாறியது. இந்நிகழ்ச்சியின் கூடுதல் சிறப்பு என்றால் அது கமல்ஹாசன் தான். அவர் தொகுத்து வழங்கும் விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இன்றளவும் 5-வது சீசன் வரை அவரே தொகுத்து வழங்கி வருகிறார்.

25

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த ஷோ முடிவுக்கு வர உள்ளது. இதன் இறுதிப்போட்டியில் பாவனி, அமீர், ராஜு, பிரியங்கா, நிரூப் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஒருவர் தான் டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் நபருக்கு ரூ.50 லட்சம் பரிசு வழங்கப்படும்.

35

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் என்றால் அது தாமரைச் செல்வி தான். நாடகக் கலைஞரான இவர், இந்நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். இறுதிப்போட்டி வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட தாமரைச் செல்வி, கடந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்றதன் காரணமாக எலிமினேட் செய்யப்பட்டார்.

45

இந்நிகச்சியில் இருந்து வெளியேறியதும் அவருக்கு மற்றொரு பிரம்மாண்ட வாய்ப்பை விஜய் டிவி வழங்கி உள்ளது. அதன்படி குக் வித் கோமாளி சீசன் 3-ல் தாமரை போட்டியாளராக கலந்துகொள்ள உள்ளார். இது ஒருபுறம் இருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தாமரைக்கு வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

55

அதன்படி அவருக்கு ஒரு வாரத்துக்கு 70 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் 14 வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்ததால், அவருக்கு மொத்தம் 9 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்துள்ளதாம். இதை அறிந்த ரசிகர்கள் அவர் money டாஸ்கில் 12 லட்சத்துடன் வெளியேறி இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிக் பாஸ் (தமிழ்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved