- Home
- Cinema
- Niroop : யாஷிகா, அபிராமி உடன் பிரேக் அப்.. இதுபோக நிரூப்புக்கு 3 எக்ஸ் லவ்வர்ஸாம்! பெரிய PlayBoy-யா இருப்பாறோ?
Niroop : யாஷிகா, அபிராமி உடன் பிரேக் அப்.. இதுபோக நிரூப்புக்கு 3 எக்ஸ் லவ்வர்ஸாம்! பெரிய PlayBoy-யா இருப்பாறோ?
பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய நிரூப்பின் காதல் அட்ராசிட்டி தான் தற்போது பரப்ரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. தமிழில் இந்நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில், ஆரவ்வும், இரண்டாவது சீசனில் ரித்விகாவும், மூன்றாவது சீசனில் முகினும், நான்காவது சீசனில் ஆரியும், ஐந்தாவது சீசனில் ராஜுவும் டைட்டில் வின்னர்களாகினர்.
பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில், காதல் சர்ச்சைக்கு பஞ்சமிருக்காது. இதுவரை நடந்து முடிந்த சீசன்களில் ஆரவ் - ஓவியா, மகத் - யாஷிகா, கவின் - லாஸ்லியா, பாலாஜி - ஷிவானி ஆகியோரது காதல் விவகாரங்கள் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இந்த காதல் எல்லாம் பிக்பாஸ் முடிஞ்சதும் காணாமல் போய்விட்டன.
இந்நிலையில், பிக்பாஸ் 5-வது சீசனில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை முன்னேறி அசத்திய நிரூப்பின் காதல் அட்ராசிட்டி தான் தற்போது பரப்ரப்பாக பேசப்பட்டு வருகிறது. இவரும் நடிகை யாஷிகாவும் முன்னாள் காதலர்கள், கருத்து வேறுபாடு காரணமாக காதலை முறித்துக்கொண்ட இவர்கள் தற்போது நண்பர்களாக பழகி வருகின்றனர்.
அதேபோல் தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார் நிரூப். இதிலும் அவரது முன்னாள் காதலி ஒருவர் பங்கேற்றுள்ளார். அது வேறயாருமில்ல, அபிராமி தான். இவர்கள் இருவரும் 3 ஆண்டுகள் காதலித்தார்களாம். பின்னர் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். தற்போது மீண்டும் இருவரும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளதால், என்ன நடக்கப்போகிறதோ என்பதை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர்.
இவர்கள் இருவரைத் தவிர மேலும் 3 பெண்களை காதலித்து, பின்னர் பிரேக் அப் செய்துள்ளாராம் நிரூப். இதை அவரே பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கூறி இருக்கிறார். இதையெல்லாம் பார்த்து ஷாக் ஆன நெட்டிசன்கள், “நிரூப் பெரிய PlayBoy-யா இருப்பாரு போல” என கமெண்ட் செய்து வருகின்றனர்.