பிக்பாஸ் கவினுக்கு டும் டும் டும்..! மணமகள் யார்? திருமண தேதி குறித்து வெளியான தகவல்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்து பிரபலமான, பிக்பாஸ் கவினுக்கு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரின் ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய் டிவி தொடரில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் கவின். 'கனாக்காணும் காலங்கள்' சீரியல் மூலம், கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னுடைய சின்னத்திரை பயணத்தை துவங்கிய கவின், இதை தொடர்ந்து தாயுமானவன் சீரியலில் நடித்தார். ஆனால் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது என்றால், அது 'சரவணன் மீனாட்சி' சீரியல் தான்.
இதையடுத்து தொகுப்பாளராக ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி உள்ள கவின், பின்னர் சினிமாவில் ஹீரோவாக நடிக்க வாய்ப்பு தேடினார். அந்த வகையில் கவின் முதன்முதலாக ஹீரோவாக நடித்த திரைப்படம் 'நட்புன்னா என்னனு தெரியுமா'. இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை என்றாலும், விடாமுயற்சியோடு வாய்ப்புகள் தேடி நடித்தார். ஆனால் இவர் நடித்த படங்கள் சில வெளியாகாமல் போனது.
பின்னர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் கவின். ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நெகடிவ் விமர்சனங்களே கிடைத்தாலும், பின்னர் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைக்க துவங்கியது. பிக்பாஸ் வீட்டின் உள்ளே இருக்கும் போது... சக போட்டியாளரும், இலங்கை செய்தி வாசிப்பாளருமான லாஸ்லியாவை விழுந்து... விழுந்து காதலித்தார். லாஸ்லியா ஃபைனலுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக.... பிக்பாஸ் கொடுத்த ஐந்து லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு இவர் வெளியேறியது யாருமே எதிர்பாராத ஒன்று எனலாம். இவரின் இந்த செயல் கவின் மீதான, மதிப்பை கூட்டியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என பலர் விருப்பப்பட்டாலும், இருவருமே ஒருவருக்கொருவர் தெரியாதவர்கள் போல் நடந்து கொண்டது மட்டும் இன்றி, அவரவர் பாதையில் பயணிக்க துவங்கினர். லாஸ்லியா அடுத்தடுத்து, அதிரடியாக பட வாய்ப்புகளை கைப்பற்றி நடித்தாலும், ஒரு வெற்றியை கூட கொடுக்காததால் தற்போது, பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்.
.
அச்சச்சோ... விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பவித்ரா..! என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்..!
ஆனால் கவின் மிகவும் பொறுமையாக, நேர்த்தியான கதைகளை தேர்வு செய்து நடித்து, தற்போது வளர்ந்து வரும் இளம் நடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான லிப்ட் மற்றும் டாடா ஆகிய படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் கவினின் கைவசம் இரண்டு புதிய படங்களும் உள்ளன.
இந்நிலையில் தற்போது கவின் திருமணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, கவினுக்கு ஆகஸ்ட் 20 ஆம் தேதி, திருமணம் நடைபெற உள்ளதாகவும், பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை தான் கவின் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கவின் ஆர்மியை சேர்ந்த ரசிகர்கள் தொடர்ந்து அவருக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். விரைவில் மற்ற தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.