- Home
- Cinema
- Arshi Khan : விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்..! தற்போதைய நிலை குறித்து வெளியான தகவல்..!
Arshi Khan : விபத்தில் சிக்கிய பிக்பாஸ் பிரபலம்..! தற்போதைய நிலை குறித்து வெளியான தகவல்..!
ஹிந்தியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 11 வது சீசன் மற்றும் 14 - வது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய நடிகை அர்ஷி கான் (Arshi Khan) விபத்தில் சிக்கிய சம்பவம், பாலிவுட் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது பல பாலிவுட் திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வரும் அர்ஷி கான் படப்பிடிப்புக்காக டெல்லியில் இருந்த போது, நவம்பர் 22 ஆம் தேதி டெல்லியில் உள்ள மாளவியா நகரில் ஒரு பெரிய விபத்தில் இருந்து சிக்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் எதுவும் இன்றி சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று (நவம்பர் 23 ஆம் தேதி) செவ்வாய்கிழமை காலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நடிகை, தற்போது மெல்ல மெல்ல குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த கோர விபத்து குறித்து, பிரபல ஊடகம் ஒன்றில் பகிர்ந்து கொண்டுள்ள அர்ஷி, "தான் காரில் வெளியே சென்று கொண்டிருந்தபோது சில ரசிகர்கள் என்னைக் கண்டு முன்னால் வந்து கொண்டிருந்ததைக் கண்டேன். நான் என் ஓட்டுனரை மெதுவாகக் வாகனத்தை இயக்குமாறு கூறினேன். அதனால் நான் அவர்களை பார்த்து கை அசைக்கவோ அல்லது அவர்களை பார்த்து புன்னகைக்கவோ முடியவில்லை. அப்போதுதான் மற்றொரு வாகனம் எங்கள் காரை பின்னால் இருந்து திடீர் என மோதியது.
அந்த அதிர்வில் தன்னுடைய காரின் முன்பக்க கண்ணாடி முழுவதுமாக உடைந்து தன்னுடைய தலையில் காயம் ஏற்பட்டது. நான் காரில் இருந்து வெளியே வர முயற்சித்தேன், எனக்கு உதவ சிலர் காரை நோக்கி விரைந்தது வந்தனர். எனக்கு தலையில் ரத்த காயம் ஏற்பட்டதால், மயக்கம் அடைந்தேன். நான் சுயநினைவின்றி இருந்தபோது என்னை மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கார் கண்ணாடி நொறுங்கியதால், தனக்கு மட்டுமே சில காயங்கள் ஏற்பட்டதாகவும் கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார்.
மருத்துவர்கள் தன்னை பரிசோதனை செய்து விட்டு எந்த உள் காயமும் ஏற்படவில்லை என கூறியுள்ளதாகவும், மெல்ல மெல்ல இந்த விபத்தின் அதிர்ச்சியில் இருந்தும், தனக்கு ஏற்பட்ட லேசான காயங்களில் இருந்து குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
தற்போது நடிகை அர்ஷி டெல்லியில் படப்பிடிப்பில் இருந்ததால், அவருடன் குழுவினர் இருந்துள்ளனர். விபத்து நேர்ந்த பின்னர் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட்ட பின்னர் அவரது சகோதனர் உடனடியாக மருத்துவமனைக்கு விரைத்துள்ளார். லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டதால் சில தினங்களில் சரியாகி விடும் என்றும், பின்னர் வழக்கம் போல் அர்ஷி படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்துவார் என கூறப்படுகிறது.