MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • BiggBoss Arav : சூர்யாவுக்கு வில்லனாகும் சான்ஸை மிஸ் பண்ணிய ஆரவ்... எல்லாத்துக்கும் காரணம் உதயநிதி தானாம்

BiggBoss Arav : சூர்யாவுக்கு வில்லனாகும் சான்ஸை மிஸ் பண்ணிய ஆரவ்... எல்லாத்துக்கும் காரணம் உதயநிதி தானாம்

BiggBoss Arav : நடிகர் ஆரவ்வும், பிக்பாஸுக்கு பின் ஏராளமான படங்களில் நடிக்க கமிட் ஆனார். முதலாவதாக இவர் நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்கிற திரைப்படம் வெளியானது. 

1 Min read
Author : Ganesh A
Published : Mar 11 2022, 10:06 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிக்பாஸ் டைட்டில் வின்னர்

தொலைக்காட்சிகளில் மிகவும் பேமஸ் ஆன ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ், கடந்த 2017-ம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சி முதல் சீசனிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டது. இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறி பிக்பாஸ் டைட்டிலையும் தட்டிச் சென்றார் ஆரவ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

குவிந்த பட வாய்ப்பு

பிக்பாஸ் மூலம் பிரபலங்களுக்கு அந்நிகழ்ச்சிக்கு பின் சினிமாவில் அதிக மவுசு உண்டு. அந்தவகையில் நடிகர் ஆரவ்வும், பிக்பாஸுக்கு பின் ஏராளமான படங்களில் நடிக்க கமிட் ஆனார். முதலாவதாக இவர் நடிப்பில் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் என்கிற திரைப்படம் வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வரவேற்ப்பை பெறவில்லை. இதையடுத்து இவர் நடித்த ராஜ பீமா திரைப்படம், ரிலீசாகாமல் முடங்கிப் போய் உள்ளது.

34

உதயநிதிக்கு வில்லன்

ஆரம்பத்தில் வெளியானபடங்கள் சரிவர அமையாததால், தற்போது ஹீரோவாக நடிப்பதை ஓரங்கட்டி வைத்துவிட்டு, வில்லன் வேடங்களில் நடிக்கத்தொடங்கி உள்ளார் ஆரவ். அதன்படி இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலினுக்கு வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

44

மிஸ் ஆன சான்ஸ்

இந்நிலையில், நடிகர் ஆரவ், சூர்யாவுக்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சூர்யா நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது ஆரவ் தானாம். உதயநிதி படத்திற்காக அவர் உடல் எடை அதிகரித்து இருந்ததால், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு அந்த தோற்றம் செட் ஆகாது எனக் கூறிவிட்டார்களாம். இதனால் அவருக்கு பதில் வினய்யை வில்லனாக நடிக்க வைத்துள்ளனர். இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... Samantha New Business : சைலண்டாக புது பிசினஸ் தொடங்கிய சமந்தா.... அப்படி அதுல என்ன ஸ்பெஷல்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bigg Boss Tamil 10 : தூத்துக்குடியில் இருந்து காமன்மேன் ஆக களமிறங்கிய தங்கமகன்... யார் இந்த ஜேசன்?
Recommended image2
Who Is Dhanya Pallath: ரிசார்ட் வெப் சீரிஸ் முதல் பிக் பாஸ் வரை.. யார் இந்த தன்யா பல்லத்? முழு விவரம் இதோ!
Recommended image3
Bigg Boss Tamil 10 : பிக் பாஸில் அதகள எண்ட்ரி கொடுத்த கோமாளி... யார் இந்த அன்சர்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved