MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பிக் பாஸ் தமிழ் சீசன் 8 : ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் பரபரப்பு

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 : ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததால் பரபரப்பு

Bigg Boss Tamil Season 8 : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் முக்கியப் பொறுப்பு வகித்து வரும் நபர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
| Updated : Dec 03 2024, 01:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Bigg Boss Tamil season 8

Bigg Boss Tamil season 8

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்கள் களத்தில் உள்ளனர். இதுவரை நடைபெற்ற எவிக்‌ஷன்களில் ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா, வர்ஷினி, ஷிவக்குமார் ஆகிய 7 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடைய உள்ளதால் போட்டி கடுமையாகி உள்ளது.

24
Bigg Boss Vijay Sethupathi

Bigg Boss Vijay Sethupathi

பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழில் இதுவரை 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு தற்போது 8-வது சீசனும் சக்சஸ்புல்லாக நடைபெற்று வருவதற்கு முக்கிய காரணம் அதில் உள்ள போட்டியாளர்கள் மட்டுமல்ல, அதற்கு பின்னணியில் உழைக்கும் ஊழியர்களும் தான். பிக்பாஸ் நிகழ்ச்சி 20 போட்டியாளர்களை வைத்து நடத்தப்பட்டாலும் அவர்களை கண்காணிக்கு நூற்றுக்கணக்கான கேமராக்கள் உள்ளன. அதை நிர்வகிக்க தனி டீம், இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், அசோசியேட் இயக்குனர்கள் என அந்நிகழ்ச்சிக்கு பின்னால் 500க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... கடைசி இடத்தில் இருந்த சாச்சனா; ஆனா எலிமினேட் ஆனது சிவா - நியாயமானு கேட்கும் சுஜா!

34
Bigg Boss Tamil season 8 contestants

Bigg Boss Tamil season 8 contestants

அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8-வது சீசனில் அசோசியேட் இயக்குனராக பணியாற்றி வருபவர் தான் ஸ்ரீதர். இவர் நேற்று மாலை வீட்டில் தூக்கில் தொங்கியபடி பிணமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் இந்த மரணச் செய்தி பிக் பாஸ் நிகழ்ச்சி குழுவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ஸ்ரீதரின் உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனை செய்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

44
Bigg Boss House

Bigg Boss House

மேலும் இந்த தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். ஸ்ரீதர் குடும்ப பிரச்சனை காரணமாக இந்த முடிவை எடுத்தாரா? அல்லது ஏதேனும் கடன் பிரச்சனையா அல்லது வேலைப் பழு காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்ரீதரின் தற்கொலை முடிவு அவரின் குடும்பத்தை மட்டுமின்றி அவருடன் பணியாற்றிய பிக்பாஸ் குழுவையும் ஸ்தம்பிக்க வைத்துள்ளது.

இதையும் படியுங்கள்... பிக் பாஸில் இந்த வாரம் நாமினேஷனில் தொக்கா மாட்டியது யார்... யார்?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
மமிதா பைஜூ முதல் ஸ்ரீலீலா வரை: 2K ஹிட்ஸ்களின் மனதை கொள்ளை கொண்ட டாப் ஹீரோயின்கள்!
Recommended image2
2 வருடங்களாக ஒரு தமிழ் படம் கூட ரிலீஸ் இல்ல; மார்க்கெட்டை இழந்தாரா நயன்தாரா: இளம் ஹீரோயின்களை தேடும் தமிழ் சினிமா?
Recommended image3
ரஷ்மிகா–விஜய்! ரொமான்டிக் டான்ஸ் வைரல்… ஜோடியை மிஞ்சிய மணமகன் தாயாரின் அசத்தல் நடனம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved