திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிக்பாஸ் ஜூலி..அவருக்கு என்னாச்சு தெரியுமா?
பிக் பாஸ் மூலம் பிரபலமான ஜூலி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Bigg Boss Julie
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அறியப்பட்ட ஜூலி பின்னர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனின் போட்டியாளராக கலந்து கொண்டார்.
Bigg Boss Julie
இந்த ரியாலிட்டி ஷோ மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டார் ஜூலி. அந்த நிகழ்ச்சியில் இவரது கலகம் ரசிகர்களின் எதிர்மறை விமர்சனங்களுக்கு ஆளானது.
Bigg Boss Julie
நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் படங்களில் நடித்து வந்த ஜூலி மாடலிலும் படு பிசியாகி விட்டார். ஹீரோயின்களுக்கு இணையாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்.
Bigg Boss Julie
இதற்கிடையே ஜூலியின் காதலர் மோசடி செய்துவிட்டதாக அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை ஜூலி அளித்திருந்தார். அந்த புகார் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.
Bigg Boss Julie
பின்னர் விசாரணையில் ஜூலி மீதுதான் மொத்த தவறும் என்பது ஊர்ஜிதமானது. இருந்தும் எப்போதும் போல சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி போஸ் கொடுத்தும் வீடியோக்கள் வெளியிட்டும் பிஸியாக இருந்தார் ஜூலி.
Bigg Boss Julie
இதற்கிடையே புஷ்பா படத்தில் இருந்து வெளியான ஓ சோல்டரியா மாமா பாடலுக்கு சமந்தாவை விட மிகவும் மோசமாக குத்தாட்டம் போட்டு கவர்ச்சி வீடியோவை வெளியிட்டார் ஜூலி.
Bigg Boss Julie
அதன் பிறகு சமீபத்தில் ஒளிபரப்பான பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஜூலி இறுதிவரை போட்டியாளராக இருந்து கடைசி நேரத்தில் வெளியேற்றப்பட்டார். இந்த சீசனிலும் இவரது கலகம் வெகுவாக பேசப்பட்டது.
Bigg Boss Julie
தற்போதும் பிக் பாஸ் ஜூலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்த பதிவிற்கு பதில் அளித்துள்ள ஜூலி தனது கண்ணில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக லாசிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.